
பிரபல தமிழ் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்ததை அடுத்து திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் திரை உலகின் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் பல படங்களை தயாரித்த நிலையில் பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு அவர் நாயகன், வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ஆர்கே சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்த ‘விசித்திரன்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ஆர்.கே. சுரேஷ் மனைவிக்கு சில மாதங்களுக்கு முன் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது ஆர்கே சுரேஷ், தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். குழந்தைக்கு சில நிமிடங்கள் சுவாச பிரச்சனை இருந்ததாகவும், ஆனால் தற்போது குழந்தையின் உடல்நிலை கடவுள் அருளால் நன்றாக உள்ளது என்றும் ஆர்கே சுரேஷ் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தனது குழந்தையின் புகைப்படத்தையும் பதிவு செய்த நிலையில் அந்த குழந்தைக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
எங்களுக்கு ஆண் குழந்தை பாக்கியம். துரதிர்ஷ்டவசமாக அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது, கடவுள் அருளால் அவர் நலமாக உள்ளார். தயவு செய்து உங்கள் பிரார்த்தனையில் எங்களை காப்பாற்றுங்கள் #ஓம்நமசிவாய் pic.twitter.com/15NKDTvcYF
— ஆர்.கே.சுரேஷ் (@studio9_suresh) ஜனவரி 20, 2023