
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்த நடிகை ஒருவர் குளத்தில் இறங்கி இரண்டு யானைகளை குளிப்பாட்டும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாக வருகிறது.
பிரபுதேவா நடித்த ‘சார்லி சாப்ளின்’ என்ற திரைப்படத்தில் நாயகியாகவும், சிம்பு நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியவருமான நடிகை அடா சர்மா சமூக வலைதளங்களில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வனவிலங்கு ஆர்வலரான அடா சர்மா அவ்வப்போது நாய், குரங்கு, பூனை உள்ளிட்ட விலங்குகளுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது நடுக்காட்டில் உள்ள ஒரு குளத்தில் இரண்டு யானைகள் குளித்து கொண்டிருக்கும் போது அந்த யானைகளுடன் இறங்கி குளிப்பாட்டும் வீடியோவை பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இரண்டு யானைகளுடன் இறங்கிய நடிகைக்கு ஒரு தைரியம் என பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாக வருகிறது.