
சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை கழகத்தால் (TNIFMC) நிர்வகிக்கப்படும் தமிழ்நாடு எழுச்சியுறும் விதை நிதியம் (TNESSF) மற்றும் நிறுவனங்களின் இணக்க நிதி கண்காணிப்பு அமைப்பு (CCFMS) திட்டத்தினை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான ஸ்டார்ட்அப் நிதி 2022-2023 திட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் முதலீட்டாளர்களுக்கு அனுமதி ஆணைகளை மு.க. ஸ்டாலின் வழங்குகிறார்.