
தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படுகிறது. 2022 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வில் முதல் தாள் நடத்தப்பட்டு அதில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இரண்டாம் தாள் 2023 ஜனவரி 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு 2022 மார்ச் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மார்ச் 14 முதல் ஏப்ரல் 26 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கான முதல் தாள் தேர்வு 14.10.2022 முதல் 19.10.2022 வரை நடத்தப்பட்டது. இதில் 1,53,533 தேர்வர்கள் கலந்துகொண்டனர். முதல் தாள் முடிவுகள் 07.12.2022 இல் வெளியிடப்பட்டது.
அதில் 21,543 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களுக்கான சான்றிதழ் 22.12.2022 தேதி முதல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையத்தளம் மூலமாக வழங்கப்பட்டது. தற்போது, இரண்டாம் தாளுக்கான தேர்வு தேதிகளை அறிவித்துள்ளனர்.
2023 ஜனவரி 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி வரை உள்ள தேதிகளில் 2 ஆம் தாள் தேர்வுகள் கணினி வழியில் மட்டுமே நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான பயிற்சித் தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையத்தளத்தில் பயிற்சியை மேற்கொள்வதற்கு, தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும்.
அனைத்து தேர்வர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம். தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு வழங்கும் விவரம் ஜனவரி மூன்றாம் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.