
டிவிட்டர்
சமீபத்தில் டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு வாடகை செலுத்தாமல் இருந்தது சர்ச்சையான நிலையில் தற்போது அடுத்தடுத்து மெட்டா மற்றும் மைக்ரோசாப்ட் அமெரிக்காவின் முக்கிய வர்த்தகப் பகுதியான சியாட்டில் மற்றும் வாஷிங்டன் பகுதியில் உள்ள அலுவலகங்களைக் காலி செய்து வருகிறது.

பேஸ்புக்
பேஸ்புக் நிறுவனம் சியாட்டில் டவுன்டவுன் பகுதியில் இருக்கும் ஆறு-அடுக்கு ஆர்பர் பிளாக் 333 மற்றும் பெல்லூவில் உள்ள ஸ்பிரிங் மாவட்டத்தின் 11-அடுக்கு பிளாக் 6-ல் உள்ள தனது அலுவலகங்களைத் துணைக் குத்தகைக்கு விட உள்ளதாக வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியது.

அலுவலகக் குத்தகை
அமெரிக்காவின் கலிபோர்னியா நகரத்தை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் இயங்கி வரும் சமூக ஊடக நிறுவனமான மெட்டா மென்லோ பார்க் பகுதி மற்றும் சியாட்டில் பகுதியில் உள்ள அலுவலகக் கட்டிடங்களின் குத்தகைகளையும் மதிப்பாய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலுவலக ரியல் எஸ்டேட்
அமெரிக்காவில் வேலைவாய்ப்பு சந்தையில் பல மாற்றங்கள் நடந்த நிலையில் அலுவலக ரியல் எஸ்டேட் தற்போது soft market ஆக மாறியுள்ளது. இது பொருளாதாரச் சுழற்சியின் ஒரு கட்டமாகும், இந்தச் சூழ்நிலையில் வாங்குபவர்களைக் காட்டிலும் விற்பனை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

பொருளாதார மந்தநிலை
இதைவிட முக்கியமாக சந்தையில் கூடுதல் அலுவலங்கள் விற்கப்படும் குத்தகைக்குக் காரணமாக இருந்தால் குறைவான விலையில் அலுவலகக் கட்டிடத்தைப் பெற முடியும். இது அமெரிக்காவைப் பொருளாதார மந்தநிலைக்குத் தள்ளும் ஒரு சிக்னல் ஆகப் பார்க்கப்படுகிறது.

மைக்ரோசாப்ட்
ரெட்மாண்ட் பகுதியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மைக்ரோசாப்ட்-க்குப் பெல்லூவ் பகுதியில் உள்ள 26-அடுக்கு சிட்டி சென்டர் பிளாசா குத்தகை ஒப்பந்தம் ஜூன் 2024 முடிய உள்ள நிலையில் இதைப் புதுப்பிக்க மாட்டோம் என்று மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

வொர்க் பிரம் ஹோம்
ரிமோட் வேலைவாய்ப்புகள் அமெரிக்க டெக் துறையில் முக்கிய அங்கமாக மாறிய நிலையில், அனைத்து துறையிலும் தொழில்நுட்பம் அதிகரித்து வரும் பணிநீக்கங்கள் மத்தியில் துறை மந்தநிலை செல்லும் நிலை உருவாகும் நிலையில் அமெரிக்காவின் சியாட்டில் பகுதியில் மட்டும் அல்லாமல் பிற முக்கிய வர்த்தக இடங்களிலும் இடத்திற்கான தேவை குறைக்கப்பட்டுள்ளது. இதன் வெளிப்பாடு தான் இது.