
தமிழில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற வாரிசு படம் குடும்ப ரசிகர்களின் ஆதரவால் நல்ல வசூலைப் பெறுகிறது. இதன் காரணமாக வாரிசு ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துவருவதாக கூறப்படுகிறது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் நடிகர் விஜய் படக்குழுவினருக்கு சென்னை ஈ.சி.ஆரில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில் விருந்தளித்திருக்கிறார். மேலும் இன்று சென்னையில் வாரிசு படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர் தில் ராஜு, இயக்குநர் வம்சி, சரத்குமார், சங்கீதா, வி.டி.வி.கணேஷ், ஷாம் போன்ற பலர் கலந்துகொண்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர்.
விழாவில் பேசிய இயக்குநர் வம்சி, எல்லோரும் என்னை தெலுங்கு இயக்குநர்னு சொல்லிட்டு இருந்தீங்க. அது என்னை காயப்படுத்தியது. நான் தமிழோ தெலுங்கோ இல்லை. நான் ஒரு நல்ல மனிதன். இன்னைக்கு தமிழ் மக்கள் அவங்க நெஞ்சில் ஒரு சிறிய இடம் கொடுத்திருக்கீங்க. அதற்கு நன்றி. இதுபோதும் எனக்கு என்று உருக்கமாக பேசினார்.
அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக பேசிய விடிவி கணேஷ், ”இயக்குநர் வம்சி பேசும்போது என்னை தெலுங்குனு சொல்றாங்கனு ஃபீல் பண்ணார். எங்க தமிழ் ஆளுங்களுக்கு ஒருத்தர பிடிச்சிருந்திருச்சுனா விடவே மாட்டோம். தூக்கிட்டு போய்டுவோம். அதுதான் எங்க தமிழர்களோட ஸ்பெஷாலிட்டி. எல்லோரையும் வாழ வைப்போம். உலகம் எல்லாம் தமிழ் ஆளுங்க இருக்காங்க என்று பேசினார்.
வாரிசுடு படம் தொடர்பாக ஒரே மாதிரி பதிவிடும் தெலுங்கு ரசிகர்கள்
தமிழைப் போலவே தெலுங்கிலும் வாரிசுடு படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தெலுங்கு ரசிகர்கள் வாரிசு படத்தைப் பாராட்டி பதிவிட்டு வருகின்றனர். ஆனால் பெரும்பாலும் ஒரே பதிவை தான் ரசிகர்கள் பகிர்ந்து கொள்வதால் காசு கொடுத்து படம் பற்றிய போலியான பிம்பத்தை உருவாக்குவதாக படக்குழு மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. தெலுங்கு ரசிகர்கள் பலர் தயாரிப்பாளரை நேரடியாக விமர்சித்துள்ளனர். ஒரு வார்த்தை கூட மாறாமல் அனைவருமே ஒரு ட்விட்டை செய்த விளம்பரம் இல்லாமல் வேறு என்ன என கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரித்துள்ள இந்தப் படத்தை பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கியுள்ளார்.இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க, பிரபு, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா, சம்யுக்தா, யோகி பாபு உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: