
சொந்த வீடு கனவு
தனக்கென ஒரு தனி வீடு வேண்டும், சிறியதாக இருந்தாலும் சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. ஆனால் வீடு வாங்குவதற்கு மட்டுமல்ல, வாங்கிய வீட்டில் குடியிருப்பதற்கும் யோகம் வேண்டும் என்பார்கள். சொந்த வீடு யோகம் அமைவதற்கு தெய்வ அருள் நிச்சயம் தேவை.
சொந்த வீடு வாங்க வணங்க வேண்டிய தெய்வம் :
அப்படி சொந்த வீடு வாங்க அல்லது கட்டுவதற்கு ஆசைபடுபவர்கள், நிலம், தோட்டம், வயல் போன்றவற்றை வாங்க முயற்சி செய்பவர்கள், நிலம் அல்லது மனை தொடர்பான பிரச்சனைகளில் சிக்கி தவிப்போர் வணங்க வேண்டிய தெய்வம், பூமா தேவி. பெருமாள் பல திருப்பெயர்களில் கோவில் கொண்டிருந்தாலும் அவர் அருகில் நிச்சயம் பூதேவி, ஸ்ரீதேவி இருப்பார்கள். இவர்களில் பூதேவியை வழிபட்டாலும், அவரின் நாயகனாக விளங்கும் திருமாலை வழிபட்டாலும் பூமி தொடர்பான பிரச்சனைகள் நீங்கி, யோகம் வந்து சேரும்.
வணங்க வேண்டிய தெய்வம்

பூமிக்கே பிரச்சனை ஏற்பட்ட போது, வராக மூர்த்தியாக வந்து தனது கொம்பினால் தோண்டி எடுத்து, தனது மூக்கின் மேல் தாங்கியவர் ஸ்ரீமன் நாராயணன். இந்த வாராக மூர்த்தி எழுந்தருளி, அருள்பாலிக்கும் கோவில்களுக்கு சென்று வழிபட்டால் பூமி தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். சில தலங்களில் பெருமாள், பூவராக பெருமாள் என்ற பெயரில் காட்சி தருவார். அந்த கோவில்களுக்கும் சென்று வணங்கினால் பூமி தொடர்பான நன்மைகள் ஏற்படும்.
இது தவிர சிவ பெருமானின் பஞ்ச பூத தலங்களில் நிலத்திற்குரிய தலமாக விளங்கக் கூடியது காஞ்சிபுரம். இங்கு எழுந்தருளி உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் வழிபட்டால் சொந்த வீடு வாங்கும் கனவு நிறைவேறும். பல ஊர்களிலும் உள்ள பஞ்ச பூத தலங்களுக்கும் சென்று வழிபட்டால் பூமி தொடர்பான யோகம் ஏற்படும்.
ஓம் நம சிவாய மந்திரம் சொல்வதால் என்ன பலன் கிடைக்கும் – கேள்விகளும், பதில்களும்
சொந்த வீடு அமைய செல்ல வேண்டிய கோவில்கள் :

இம்மையிலும் நன்மை தருவார் ஆலயம் – மதுரை
சங்கர நாராயணர் கோவில் – சங்கரன்கோவில்
ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் – சென்னை (தங்கசாலை)
பூமிநாத சுவாமி கோவில் – மணச்சநல்லூர் (திருச்சி)
அக்னிபுரீஸ்வரர் ஆலயம் – திருப்புகழூர்
பால சுப்ரமணிய சுவாமி கோவில் – சிறுவாபுரி
வாய்ப்பு இருக்கக் கூடியவர்கள் இது போன்ற தலங்களுக்கு சென்று வணங்கலாம். திருப்புகழூர், மணச்சநல்லூர், சங்கரன்கோவில் போன்ற தலங்களில் மண்ணை பூஜை செய்து, பிரசாதமாக வழங்கும் பழக்கம் உள்ளது. வாய்ப்பு இல்லாதவர்கள் பஞ்சபூதங்களின் வடிவமாக விளங்கும் சிவ பெருமானை வழிபடலாம்.
sabarimala income : சபரிமலை ஐயப்பன் கோவில் வருமானத்தில் புதிய சாதனை – இத்தனை கோடிகளா!
ஜாதகத்தில் செவ்வாயால் பிரச்சனையா?

பொதுவாக சொந்த வீடு அமைய வேண்டுமானால் ஒருவருடைய ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற வேண்டும் என்பார்கள். செவ்வாய் கிரக பலமிழந்து இருந்தாலோ, பகை கிரகங்களுடன் இணைந்து இருந்தாலோ வீடு வாங்க முயற்சி செய்தாலும் முடியாமல் போவது, வீடு கட்ட துவங்கிய பிறகு பல தடைகள் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அப்படி செவ்வாய் கிரகத்தால் சொந்த வீடு யோகம் அமையாதவர்கள், முருகப் பெருமானை வணங்கலாம்.
எப்படி வணங்க வேண்டும் ?
வீட்டில் முருகனின் திருவுருவப்படத்திற்கு முன் நெய் விளக்கு ஏற்றி வைப்பது, சொந்த வீடு வாங்குவது, நிலம் தொடர்பான பிரச்சனைகள் தீர்வது போன்றவற்றிற்கு உரிய திருப்புகழ் பதிகத்தை காலையிலும், மாலையிலும் தினமும் பாராயணம் செய்யலாம். வேண்டுதல் நிறைவேறும் வரை இந்த பதிகத்தை தொடர்ந்து பாராயணம் செய்ய வேண்டும். வாய்ப்பு இருப்பவர்கள் சொந்த வீடு கனவை நிறைவேற்றுவதற்கு புகழ்பெற்ற தலமான சென்னைக்கு அருகில் உள்ள சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு சென்று வரலாம். இத்தல முருகன், சொந்த வீடு மற்றும் திருமண யோகம் தரக்கூடிய தெய்வமாக விளங்குகிறார்.
சொந்த வீடு அமைய படிக்க வேண்டிய பதிகம் :

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உருமாற
அண்டர்மன மகிழ்மீற…வரவாலே
அந்தரியொ டுடநாடு சங்கரனு மகிழ்கூர
ஐங்கரனு முமையாளு…மகிழ்வாக
மண்டலமு முனிவோரு மெண்டிசையிலுளபேரு
மஞ்சினனு மயனாரு…மெதிர்காண
மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற
மைந்துமயி லுடனாடி…வரவேணும்
புண்டரிக விழியான அண்டர்மகள் மணவாள
புந்திநிறை யறிவாள…வுயர்தோளா
பொங்குகட லுடநாகம் விண்டுவரை யிகல்சாடு
பொன்பரவு கதிர்வீசு…வடிவேலா
தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப
தண்டமிழின் மிகுநேய…முருகேசா
சந்ததமு மடியார்கள் சிந்தியது குடியான
தஞ்சிறுவை தனில்மேவு…பெருமாளே