
அமாவாசை நாளில் விரதம் இருந்து, பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என இந்து மதம் சொல்கிறது. ஒருவர் பெறக் கூடாத சாபங்களில் மிக முக்கியமானது பித்ரு சாபம் மற்றும் குல தெய்வ சாபம். இதில் பித்ரு சாபம், பித்ரு தோஷம் ஆகியவற்றை போக்கி, வளமான, மகிழ்ச்சியான, நிம்மதியான வாழ்க்கையை பெற அமாவாசைகளுக்கு முன்னோர்கள் வழிபாடு செய்வது அவசியம். மாதந்தோறும் வரும் அமாவாசை விரதம் இருக்க முடியாதவர்கள் ஆடி அமாவாசை, புரட்டாசியில் வரும் மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் கண்டிப்பாக விரதம் இருக்க வேண்டும். அமாவாசை விரதம் இருப்பது, தர்ப்பணம் கொடுப்பது தொடர்பாக பலருக்கும் உள்ள சந்தேகங்கள் மற்றும் கேள்விகள், அவற்றுக்கான பதில்களை இங்கே பார்க்கலாம்.