
தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியான நிலையில் இந்த படத்தின் வசூல் நிலவரங்களை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
100 கோடி, 150 கோடி, 200 கோடி வசூல் செய்த போதெல்லாம் அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது 11 நாட்களில் ரூ.250 கோடி வசூல் செய்துள்ளதாக ‘வாரிசு’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் ஆனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.
தயாரிப்பு நிறுவனமே அதிகாரபூர்வமாக வசூல் தொகையை அறிவித்துள்ளதால் இந்த தொகை உண்மைதான் என்று நம்பப்படுகிறது. தளபதி விஜய் நடித்த மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர், பீஸ்ட் ஆகிய ஐந்து படங்களும் ரூ.250 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது ‘வாரிசு’ திரைப்படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அஜித்தின் ‘துணிவு’ படத்தின் வசூல் விவரங்கள் குறித்து டிராக்கர்கள் தான் அவ்வப்போது வெளியிட்ட நிலையில் தயாரிப்பு நிறுவனம் இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருப்பினும் இனிமேல் வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
போட்ரா பிஜிஎம் ஆ 🔥#MegaBlockbusterVarisu உலகம் முழுவதும் 11 நாட்களில் 250Crs+ வசூலித்தது நன்பா 🤩#தளபதி @நடிகர் விஜய் ஐயா @இயக்குனர் வம்சி @SVC_official @இசை தமன் @iamRashmika @TSeries #வரிசு #வாரிசு பொங்கல்#VarisuHits250Crs pic.twitter.com/I1UJgRIGoJ
— ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் (@SVC_official) ஜனவரி 23, 2023