
இருப்பினும் பேராதரவுடன் இப்படம் ரசிகர்களின் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.
இதைத்தொடர்ந்து இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், கௌதம் மேனன், மிஸ்கின் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இந்நிலையில் தளபதி 67 திரைப்படத்தில் விஜய் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் ,இப்படம் முழுக்க முழுக்க லோகேஷின் ஸ்டைலில் உருவாகிவருவதாகவும் தகவல்கள் வருகின்றன.
இது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதையடுத்து விரைவில் தளபதி 67 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு ப்ரோமோ வீடியோவின் மூலம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற உள்ளது.
இதைக்கேள்வி பட்ட கொடைக்கானலில் உள்ள விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஆனால் தற்போது வந்த தகவலின் படி கொடைக்கானலில் நாடகம் படப்பிடிப்பில் விஜய் கலந்துகொள்ளமாட்டாராம்.
மிஸ்கின் மற்றும் சாண்டி சம்மந்தப்பட்ட காட்சிகள் தான் கொடைக்கானலில் படமாக்கப்படவுள்ளதாம். இதைக்கேள்வி பட்ட கொடைக்கானல் ரசிகர்கள் அப்சட்டில் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.