
நடிகர் விஜய்க்கும் நடிகை கீர்த்தி சுரேஷுக்கும் நெருக்கமான தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி வரும் தகவலால் கொதித்து போயுள்ளனர் விஜய் ரசிகர்கள்.
தொடரும் வதந்தி
நடிகர் விஜய்யும் கீர்த்தி சுரேஷும் நெருக்கமாக இருப்பதாக கூறி அல்லோகலப்பட்டு வருகிறது சமூக வலைதளங்கள். சர்க்கார் படப்பிடிப்பின் போது கீர்த்தி சுரேஷும் விஜய்யும் சேர்ந்து எடுத்த போட்டோவை வைரலாக்கி வரும் நெட்டிசன்கள் இதுதான் ஆதாரம் என்றும் கூறி வருகின்றனர். ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் விஜய் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில் அந்த போட்டோவில் விஜய்யின் காலை தனது காலால் மிதித்தபடி உள்ளார் கீர்த்தி சுரேஷ்.
கமல்ஹாசன்: அறம் எங்கே செல்லுபடியாகும்… டிவிட் போட்டு வாங்கிக்கட்டும் கமல்!
ஹேஷ்டேக்கால் பரபரப்பு

இந்த போட்டோவை வைரலாக்கி வரும் நெட்டிசன்ஸ், விஜய் தனது மனைவியை விவாகரத்து செய்யப்போவதாகவும் கொளுத்திப் போட்டு வருகின்றனர். அதோடு #JusticeForSangeetha என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து நடிகர் விஜய்யை வாய்க்கு வந்தபடி திட்டி வருகின்றனர். விக்கிப்பீடியாவிலும் கண்டபடி எடிட் செய்து அலற விட்டு வருகின்றனர். இதனால் கொதித்து போயுள்ளனர் விஜய் ரசிகர்கள்.
Bigg Boss Tamil 6, Azeem: மோசமான முன் உதாரணம்… அசீம் வெற்றியால் கடுப்பான நடிகை!
வாழ்க்கையை கெடுக்காதீர்கள்

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக உள்ள விஜய்யின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சிலர் இந்த இழிவான வேலையில் ஈடுபட்டு வருவதாக அவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் சினிமா நட்சத்திரங்களும் மனிதர்கள்தான், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கெடுக்காதீர்கள் என்று சாடி வருகின்றனர். மேலும் அவர்களுக்கும் மனசு உள்ளது என்றும் அவர்களுக்கும் குடும்பம் உள்ளது என்றும் தரம்தாழ்ந்த செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
விஜய்: ‘அண்ணி பாவம்’ பரவும் வதந்தியால் ட்ரோலாகும் விஜய்… தெறிக்கும் டிவிட்டர்!
சத்தியமாக அறைந்துவிடுவேன்

#JusticeForSangeetha என்ற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டுள்ள இந்த ரசிகர், விஜய் கீர்த்தி சுரேஷ் மற்றும் சங்கீதா விஷயம் பொய்யானால் இப்படி ஒரு ஹேஷ்டேக்கை ஆரம்பித்தவரை சத்தியமாக நான் அறைந்துவிடுவேன் என கூறியுள்ளார். மேலும் காரணம் என்னவாக இருந்தாலும் அவர்களும் மனிதர்கள்தான், அவர்களுக்கும் சுயமரியாதை இருக்கிறது. நீங்கள் ஒருவரை வெறுக்கிறீர்கள் என்பதற்காக குழப்பங்களை உருவாக்குவது சகித்துக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜய்: பிரபல நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் விஜய்… லீக்கான போட்டோ!
எவ்வளவு கேவலம்?

மற்றொரு ரசிகரான இவர், #JusticeForSangeetha என்ற ஹேஷ்டேக்கால் கடுப்பாகியுள்ளார். இதுகுறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது, உங்களுக்கு என்ன மக்களே பிரச்சனை? #JusticeForSangeetha நிஜமாவா?!!? இப்படி ஒருவரை சீண்டுவது எவ்வளவு கேவலமானது? என திட்டி தீர்த்துள்ளார். இதேபோல் விஜய் குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு அவரது ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. தற்போது தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காதலி அதியா ஷெட்டியை கரம்பிடித்தார் கிரிக்கெட் வீரர் கேஎல் ராகுல்!
விஜய் கீர்த்தி சுரேஷ்
