
பணி நீக்க நடவடிக்கை
உலகளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மைக்ரோசாப்ட் உள்ளிட்ட, பல்வேறு டெக் நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பணி நீக்க நடவடிக்கை, 21 ஆண்டுகளுக்கு பிறகு தனது பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக ஒரு இந்தியர் பகிர்ந்துள்ளார்.

எனது முதல் வேலை
எனது கல்லூரி படிப்பிற்கு எனது முதல் வேலை மைக்ரோசாப்ட்டில் தான். நான் வெளி நாட்டுக்கு வந்ததை இன்னும் நினைவில் வைத்துள்ளேன். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 21 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்து விட்டேன். பல பதவிகளை வகித்துள்ளேன். இது எனக்கு மிகுந்த மன நிறைவை அளிக்கிறது என லிங்க் இன் பக்கத்தில் பிரசாந்த் கமணி தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாப்ட்- அமேசான் – மைக்ரோசாப்ட்
சியாட்டலை சேர்ந்த கமணி 1999ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஒரு மென்பொருள் பொறியாளராக தனது வாழ்க்கையை தொடங்கினார். 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றினேன். 2015ல் நிறுவனத்தினை விட்டு வெளியேறியதாகவும் தெரிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் முதன்மை மென்பொருள் மேலாளராக இணைவதற்கு முன்பு, அமேசானில் இரண்டு ஆண்டுகள் பணி புரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அளவிட முடியாத அனுபவம்
எனது பணி அனுபவத்தில் நான் பெற்ற அனுபவத்தினை வருடங்களில் அளவிட முடியாது. அது உண்மையில் அளவிட முடியாத ஒன்று. அதற்காக நான் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு மிகுந்த நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
நான் திறமையான மற்றும் புத்தலிசாலித்தனமான நபர்களால் சூழப்பட்டிருந்தேன். மைக்ரோசாப்ட் போன்றதொரு நிறுவனத்திற்கும், சேர்க்கைக்கான விலை இதுதான். நான் அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டுள்ளேன். நான் அவர்களுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

எனக்காக என் குடும்பத்தினர்
கடைசியாக மிக முக்கியமாக என் குடும்பத்திற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் எப்போதுமே அவர்களுக்காக இருந்ததில்லை. ஆனால் அவர்கள் எப்போதுமே எனக்காக இருக்கிறார்கள். இன்றைய செய்தி அவர்களுக்கும் வேதனையை கொடுத்திருக்கலாம். அதனை நான் அறிவேன். எனினும் அவர்கள் என்னை வலுவாக கொண்டு செல்கின்றார்கள். எனக்கு ஆதரவாக இருப்பதற்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

ஏன் இந்த நடவடிக்கை
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வருவாய் விகிதமானது குறையும் என எதிர்பார்க்கப்படுவதால், பணி நீக்கமானது உள்ளது. இந்த நடவடிக்கையானது முதலீட்டாளர்கள் மந்த நிலையைப் பற்றி அதிகம் பயப்படுவதால், தொழில் நுட்ப நிறுவனங்கள் வேலைகளை குறைப்பது மற்றும் பணியமர்த்தப்படுவதை மெதுவாக்குவது போன்ற நடவடிக்கைகளை எடுத்துச் செல்கிறது.

இவ்வளவு பேர் பணி நீக்கமா?
கடந்த ஜூன் மாதத்தில் இதுவரை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர்களில் சுமார் 99,000 பேர் அமெரிக்கா தவிர்த்த நாடுகளில் வசிக்கின்றனர். மைக்ரோசாப்ட் மட்டுமின்றி இந்த பணி நீக்கத்தில் ட்விட்டர், அமேசான் மற்றும் மெட்டா போன்ற நிறுவனங்களும் பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.