
2023 பணிநீக்கம்
2023 ஆம் ஆண்டு துவங்கி 20 நாள் மட்டுமே அமேசான் 1800 ஊழியர்கள், மைக்ரோசாப்ட் 10000 ஊழியர்கள், கூகுள் 12000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்து பெரும் அதிர்ச்சி கொடுத்தது. 2022ல் மெட்டா 11000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.

டாப் 4 டெக் சேவை நிறுவனங்கள்
உலகின் டாப் 4 டெக் சேவை நிறுவனங்களும் 10000க்கும் அதிகமான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ள நிலையில், இதன் தலைவர்கள் சொல்லும் காரணமும்.. விளக்கமும் என்ன..? இதைக் கவனித்தால் எந்த நிலையில் உள்ளது என்பதை டெக் ஊழியர்கள் மிகவும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும்.

கூகுள் சிஐஓ சுந்தர் பிச்சை
சுந்தர் பிச்சை பணிநீக்கம் குறித்து தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தற்போது பணிநீக்கம் செய்வதற்காக நிறுவனம் தள்ளப்பட்டதற்கு முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.
மோசமான பொருளாதார மாற்றத்தில் கூகுளின் 25 வருட வரலாற்றில் மாட்டிக்கொண்டு உள்ளது. கடந்த 2 வருடம் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்த நிலையில், எதிர்கால நிலையை முன்கூட்டியே கணிக்காமல் கூடுதல் ஊழியர்களை நிறுவனத்தில் சேர்த்தால், தற்போது பணிநீக்கம் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளோம்.
இதேநேரத்தில் கூகுள் செலவுகளைக் குறைக்கும் விதமாக Pixelbook மடிக்கணினி மற்றும் கேம் ஸ்ட்ரீமிங் தளமாக Stadia ஆகிய இரு பிரிவையும் மூடியது.

அமேசான் சிஐஓ ஆண்டி ஜாஸ்ஸி
அமேசான் நிறுவனத்தின் சிஐஓ ஆண்டி ஜாஸ்ஸி தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் நிலையற்ற பொருளாதாரம் மற்றும் அளவுக்கு அதிகமான ஊழியர்களைப் பணியில் சேர்த்ததற்கு காரணம் ஜனவரி 18 முதல் 18000 ஊழியர்களுக்கும் அதிகமாகப் பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்தார்.
இந்தப் பணிநீக்க அறிவிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜனவரி 5 ஆம் தேதி ஈமெயில் தெரிவித்தார் அமேசான் சிஐஓ ஆண்டி ஜாஸ்ஸி . இதன் மூலம் இனி வரும் காலத்தில் பணத்தையும், நேரத்தையும் சரியான இடத்திலும், சரியான வகையில் பயன்படுத்த உள்ளதாகத் தெரிவித்தார்.
அமேசான் தனது ரோபோட்டிக்ஸ் பிரிவை மொத்தமாக மூடுவதற்காகப் பணிகளில் தீவிரமாக உள்ளது. இதுக்குறித்து அமேசான் ஊழியர்கள் லின்கிடுஇன் தளத்தில் பதவியில் உள்ளார்.

மெட்டா சிஐஓ மார்க் ஜூக்கர்பெர்க்
2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மெட்டா நிறுவனத்தில் நடந்த முக்கியமான கூட்டத்தில் மார்க் ஜூக்கர்பெர்க் மிகவும் சோகத்துடன் கலந்து கொண்டார்.
மெட்டா நிறுவனத்தின் தவறான நடவடிக்கைகளுக்குத் தான் மட்டுமே பொறுப்பு என்றும் பேசிய அவர் காலத்தில் பதிவான மிகப்பெரிய வளர்ச்சி மற்றும் வருவாய் அளவீடுகளை நம்பி நிறுவனத்தின் வளர்ச்சியைப் பற்றிய அதீத நம்பிக்கையினாலும், தவறான கணிப்பினாலும் அதிகளவிலான ஊழியர் சேர்க்கப்படவில்லை என்று கூறினார்.
இக்கூட்டத்தில் தான் மார்க் ஜூக்கர்பெர்க் முதல் முறையாக ஊழியர்களுக்கான எச்சரிக்கையைத் தாண்டி மாஸ் லேஃப்ஆப் குறித்துப் பேசினார்.
செப்டம்பர் 30ஆம் தேதி தரவுகள் படி மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகிய தளங்களில் மொத்தம் சுமார் 8700 ஊழியர்கள் உலகளவில் பணியாற்றி வந்தனர். இதில் 12 சதவீதம் வரையிலான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் 11000 ஊழியர்களை மெட்டா நிறுவன பணியில் இருந்து நீக்கினர். இந்தப் பணிநீக்க அறிவிப்பு நவம்பர் மாதம் 2022ல் வெளியானது.

மைக்ரோசாப்ட் சிஐஓ சத்ய நாடெல்லா
இந்த காலத்தில் மக்கள் டிஜிட்டல் தளத்தில் செலவு செய்யும் அளவு பெரிய அளவில் அதிகரித்து வருகிறது, ஆனால் தற்போது இது பெரிய அளவில் குறைந்துள்ளது. இதேவேளையில் உலகின் பல பகுதிகளில் ரெசிஷனா உருவாகியிருக்கும் காரணத்தால் நமது சர்வதேச வர்த்தகத்தில் எச்சரிக்கும் அளவிற்கு நெருக்கடி உருவாகியுள்ளது. இதேவேளையில் கம்பியூட்டிங் துறையில் அடுத்த அலை AI மூலம் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிர்வாகம் தனது ஹார்டுவேர் போர்ட்போலியோவில் குறிப்பிடத்தக்க அளவிலான மாற்றத்தைச் செய்துள்ளது. இதேபோல் அமெரிக்காவில் சில அலுவலகங்களின் குத்தகை ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட் தனது மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் 5 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்துள்ளது. இதனால் 10000 பேரை பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.