
நாளுக்கு நாள் வாட்ஸ்அப் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், மெட்டா நிறுவனம் தற்போது புதிய புதிய அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. முன்னதாக வாட்ஸ்அப் குழுவில் 256 நபர்கள் இணையமுடியும் என்ற எண்ணிக்கை 512 ஆக அதிகரித்துள்ளது. விரைவாக மெசேஜ்களுக்கு ரிப்ளே செய்ய ஈமோஜிகளை அனுப்புவது போன்றவை அப்டேட் செய்யப்பட்டது. இந்த வரிசையில் வாட்ஸ்அப் யூசர்களுக்காக புதிய பிரைவசி அம்சங்களை வெளியிட்டுள்ளது. இந்த வரிசையில் தற்போது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் இதுவரை டெக்ஸ்ட்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் மட்டுமே வைக்கும் வசதி இருந்த நிலையில், இனி உங்கள் குரலை வைத்து வாய்ஸ்நோட்சையும் ஸ்டேட்டஸாக வைக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.