
ஷூட்டிங் ஸ்பாட்டில் பணியாற்றிக் கொண்டிருந்த போது உதவி இயக்குனர் ராமகிருஷ்ணன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாத்தூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(25). இவர் சென்னையில் சினிமா உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக நெசப்பாக்கத்தில் தங்கி, சாலிகிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.
நேற்று இரவு பணியில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தவரை, மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இது குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “நேற்று இரவு ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டேன். உண்மையில் சிறந்த உதவி இயக்குநர் ராமகிருஷ்ணன். எந்தவொரு கெட்டப் பழக்கமும் இல்லாத நபர்.
நேற்று இரவு ஒரு அன்பான நண்பரை இழந்தேன்
ஒரு ஆர்வமுள்ள, மிகவும் திறமையான உதவி இயக்குனர் – 26 வயது… எந்த கெட்ட பழக்கமும் இல்லை, ஆரோக்கியமான வாழ்க்கை முறை.. ஆனால் கடவுள் அவரை சீக்கிரம் அழைத்துச் சென்றார்…
அவர் “சரிந்து”… வேலையின் போது இறந்துவிட்டார். #ராமகிருஷ்ணா
1/4 pic.twitter.com/dXjxcAvGkE— ஷாந்தனு (@imKBRshanthnu) ஜனவரி 24, 2023
வாழ்க்கை நிலையில்லாத ஒன்று. அவர் இறப்பதற்கு 1 மணி நேரத்துக்கு முன்னாள் அவர் எனக்கு போன் செய்தபோது என்னால் எடுக்க முடியவில்லை; நான் அவர் அழைப்பை எடுத்திருக்கலாம் என நினைக்கும் போது மன வேதனையளிக்கிறது என்றும் அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.
மேலும், தயவு செய்து தேவையில்லாத வெறுப்புகளையும் நெகட்டிவிட்டிகளையும் யாரும் பரப்ப வேண்டாம். வாழ்க்கை இருக்கும்வரை மகிழ்ச்சியாகவும், மற்றவர்களை சிரிக்க வைத்து வாழ்வோம். மகிழ்ச்சியாக இருக்க முயற்சிப்போம்.. மன அழுத்தத்தை தவிர்க்க முயற்சிப்போம். இந்த உலகில் இப்போதைக்கு இருக்கும் THE BIGGEST CULPRIT-ஏ மன அழுத்தம் தான் என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்… நான் நடிப்பை விடவேண்டுமா? மனம் உடைந்து பேசிய ராஷ்மிகா!
@ Google செய்திகளைப் பின்தொடரவும்: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: