
பீகார் மாநிலம் மேதாபூரா பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர் கிருஷ்ணா. இவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கோதுமை மண்டியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற பெண்ணுடன் திருமணமாகி 3 பெண் குழந்தைகள் மற்றும் 1 ஆண் குழந்தை என 4 குழந்தைகள் உள்ளனர்.
பஞ்சப்பில் இருந்து கிருஷ்ணா விடுமுறைக்காக தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரது மனைவி வீட்டில் இல்லை. கிருஷ்ணாவுக்கு தனது மனைவி கோபித்துக்கொண்டு மாமியார் வீட்டிற்கு சென்றுவிட்டார் என்பது தெரியவந்துள்ளது.
மனைவி பிரிந்து சென்றதை ஜீரணிக்க முடியாமல் ஆத்திரத்தில் இருந்த கிருஷ்ணா ஒருகட்டத்தில் விபரீத முடிவை எடுத்தார். தனது வீட்டின் அறைக்குள் சென்று கதவை சாத்திக்கொண்ட கிருஷ்ணா கத்தியை எடுத்து தனது பிறப்புறுப்பை வெட்டியுள்ளார். கிருஷ்ணாவின் அலறல் சத்தம் கேட்கவே அவரது உறவினர்கள் பதறிப்போய் வந்து பார்க்கையில் அவர் ரத்த வெள்ளத்தில் மூழ்கியுள்ளார்.
உடனடியாக கிருஷ்ணாவை பாட்னாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தனர். அங்கு கிருஷ்ணாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவரின் உயிருக்கு ஏதும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியதால், முழுமையாக குணமடைந்ததும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறியுள்ளனர்.
மனைவி கோபித்துக்கொண்டு மாமியார் வீட்டுக்கு சென்றதால் கணவர் எடுத்த விபரீத முடிவு அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.