
ரெட்மி நோட் 10 எஸ்: தற்போதைய சிறப்பு தள்ளுபடி விற்பனையின்போது Redmi Note 10S மொபைலின் MRP-யில் 12% தள்ளுபடி வழங்கப்படுகிறது. தள்ளுபடிக்கு பிறகு இந்த மொபைலின் விலை ரூ.14,999 (64ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்) ஆகும். இந்த மொபைலை வாங்கும் அமேசான் பிரைம் யூசர்கள் தங்கள் பரிவர்த்தனையின் போது SBI கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ.1000 கூடுதல் பிளாட் தள்ளுபடி பெறலாம். இந்த ரெட்மி மொபைல் 6.43-இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3-உடன் வருகிறது, MediaTek Helio G95 SoC பிராசெஸ்சார் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. 33W சார்ஜருடன் 5,000mAh பேட்டரி பேக் உள்ளது. இதன் 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் கொண்ட வேரியன்ட் MRP-ல் 13% தள்ளுபடிக்கு பிறகு ரூ.16,499 என்ற விலையில் கிடைக்கிறது.