
நியூசிலாந்தில் இருந்து சிட்னிக்கு வானில் பறந்து கொண்டிருந்த குவாண்டாஸ் விமானத்தில் ஏற்பட்ட என்ஜின் கோளாறு காரணமாக மேடே (mayday ) நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இது விமான நிலைய ஊழியர்களிடையே பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியது.
புதன்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு ஆக்லாந்தில் இருந்து சிட்னி நோக்கி குவாண்டாஸ் 144 விமானம் கிளம்பியது. கிளம்பி சிறிது நேரத்தில் விமானத்தின் 2 எஞ்சின்களில் ஒன்று வேலை செய்யாதது தெரியவந்துள்ளது. உடனே சிட்னி விமான நிலையத்திற்கு மேடே பிரகடனப்படுத்தப்பட்டு விமானத்தின் நிலை குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
ஒரு விமானம் ஆபத்தான நிலையில் இருக்கும்போது உடனடி உதவி தேவைப்படும்போது மேடே அழைப்பு வழங்கப்படுகிறது. அந்த விமானம் உடனே அடுத்துள்ள விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கான ஏற்பாடுகளும், நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
விமானிகள் போராடி ஒரு என்ஜின் கொண்டே சிட்னி விமான நிலையம் வரை இயக்கி வந்தனர். ஒரே என்ஜின் செயல்பாட்டால் விபத்து ஏற்பட்டுவிடுமோ என்று சிட்னி விமான நிலையத்தில் பல தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
பிற்பகல் 3.30 மணிக்கு சிட்னியில் தரையிறங்கிய பின்னர் முழுமையாக சோதிக்கப்பட்டு விபத்துக்கான ஆபத்து ஏதும் இல்லை என்று உறுதி செய்த பின்னரே டெர்மினல் பக்கம் விமானம் அனுப்பப்பட்டது. அதன் பின்னர் விமானத்தில் இருந்த 145 பயணிகளும் பத்திரமாக தரை இறக்கப்பட்டனர்.
விமானத்தை விட்டு இறங்கும் வரை பதற்ற நிலையை ஏற்படாமல் இருக்க விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு இது குறித்து எந்த செய்தியும் வழங்கப்படவில்லை. வானிலை மாற்றத்தால் ஏற்பட்ட சத்தம் என்றே பயணிகள் நினைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த வேறு எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை. அதோடு இன்ஜின் கோளாறுக்கான காரணங்கள் குறித்து அதிகாரிகள் இன்று அறிக்கை அளிக்கவில்லை என்று செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: