
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வீடு புகுந்து 58 சவரன் நகைகளை கொள்ளையடித்த கும்பலுக்கு போலீசார் வலைவீசியுள்ளனர். காந்திநகரைச் சேர்ந்த லட்சுமி நாராயணபதி குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்குச் சென்றார். வீடு திரும்பியபோது ஜன்னல் கம்பியை அறுத்து பீரோவில் இருந்த 58 சவரன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளை நடந்த வீட்டில் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.