
உலகெங்கிலும் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு பணி உத்தரவாதமற்ற சூழல் நிலவுகிறது. பணிநீக்கம் எப்போது வேண்டுமானாலும் நடைபெறலாம் என்ற சூழல். அதிலும் உயர் அதிகாரி, கடைநிலை பணியாளர் என்று எந்த வேறுபாடும் கிடையாது. பணிநீக்க நடவடிக்கையால் அனைத்து தரப்பினருமே பாதிக்கப்படுகின்றனர்.
அதில், நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பில் அல்லது தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் சார்பில் ஊழியர்களிடம் தகவல் தெரிவிக்கப்படுவதில்லை. பணிநீக்கம் குறித்த தகவல் திடீரென்று மின்னஞ்சல் மூலமாக வருகிறது. அடுத்த நொடியே அலுவலக லேப்டாப் அல்லது கம்பெடி ஐடி, பாஸ்வேர்டு போன்றவை முடக்கி வைக்கப்படுகின்றன.
தன்னுடைய நண்பர் சுற்றுலா சென்றிருந்த நிலையில், அவரை பணிநீக்கம் செய்வதற்கான இமெயில் வந்ததாக அவர் கூறியுள்ளார். இதில் அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் என்னவென்றால், ஹெச்1பி விசாவில் இருந்த அந்த நண்பர், இனி அதே விசாவில் அமெரிக்காவிற்குள் மீண்டும் நுழைய முடியாது என்பதுதான். விசா ரத்தானதால் அந்த நபர் தனது உடமைகளை விற்றுவிடுமாறு நண்பரிடம் அறிவுறுத்தியுள்ளார். வாடகை வீட்டை காலி செய்து, உரிமையாளரிடம் ஒப்படைத்துவிடும் படியும் கூறி விட்டாராம்.
மேலும் படிக்க : சகோதரனின் திருமணத்திற்கு இன்பஅதிர்ச்சி கொடுத்த சகோதரி : வைரலாகும் வீடியோ!
கவலை தெரிவித்த நெட்டிசன்கள் : வேலையும், ஹெச்1பி விசாவும் ரத்தான சூழ்நிலையில், அமெரிக்கா திரும்ப முடியாத நபருக்காக நெட்டிசன்கள் பலர் தங்கள் கவலை மற்றும் வருத்தங்களை வெளிப்படுத்தினர். குறிப்பாக, எப்போது வேண்டுமானாலும் பணிநீக்கம் செய்யப்படுவோம் என்று கத்திமுனை ஆபத்தோடு தான் எல்லோரும் பணியாற்றுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து டிவிட்டர் யூசர் ஒருவர் வெளியிட்டுள்ள கமெண்டில், “அமெரிக்க விசா நுழைவு நடவடிக்கைகள் தொலைவில் இருந்து பார்க்கும்போது கவர்ச்சிகரமானதாக தோன்றும். ஆனால், ஒரு சில நாட்களிலேயே அது அச்சுறுத்தல் நிறைந்த திரைப்படம் போல மாறும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
குழந்தை பிறந்த சில நாட்களில் வேலை பறிபோன நபர் : கூகுள் நிறுவனத்தில் அசோசியட் புரடக்ட் கவுன்சில் என்ற பொறுப்பில் இருந்து வந்த நிகோலஸ் டௌஃபு என்ற நபருக்கு கடந்த மாதம் 17ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை வளர்ப்புக்காக அவர் விடுப்பு எடுத்திருந்தார். ஜனவரி 20ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கு மகளுக்கு புட்டிப்பால் ஊட்டிக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் ஃபோனுக்கு வந்த இமெயில் ஒன்று, அவரது பணிநீக்க அறிவிப்பைக் கொண்டிருந்தது. உடனடியாக கூகுள் கார்ப்பரேட் அக்கவுண்டின் லாகின் ஆக்சஸ் தடை செய்யப்பட்டது. கூகுள் நிறுவனம் இதுவரை 12,000 பேரை பணிநீக்கம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல, அமேசான் நிறுவனம் 18,000 பேரையும், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 10,000 பேரையும் பணி நீக்கம் செய்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: