
மதுரை: காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் இறுதிச்சுற்று தொடங்கியது. இறுதி சுற்றுக்கு மொத்தம் 10 வீரர்கள் தகுதிபெற்றுள்ள நிலையில் இதுவரை 734 காவலர்கள் களமிறங்கியுள்ளனர். இதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 8-ம் சுற்று முடிவில் மாடுபிடி வீரர் அபி சித்தர் முதலிடம் பிடித்துள்ளார். ஏனாதியை சேர்ந்த அஜய் 20 காளைகள் பிடித்து இரண்டாவது இடத்தில் உள்ளார். அலங்காநல்லூரை சேர்ந்த ரஞ்சித் 12 காளைகளை பிடித்து 3-வது இடம் பிடித்துள்ளார்.