
பூமியில் உள்ள உயிர்களின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவதில் சூரிய ஒளி முக்கிய பங்கு வகிக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். அதுமட்டுமல்லாது, மனிதர்களின் ஆரோக்கிய தன்மைக்கும் சூரிய ஒளி பெரிதும் உதவுகிறது. இருப்பினும், சூரியனில் இருந்து வரும் அதிகப்படியான புற ஊதா கதிர்வீச்சு தோல் புற்றுநோயை ஏற்படுத்தும். ஆனால், சூரிய ஒளியில் குறிப்பிட்ட அளவு நேரத்தை செலவிடுவது நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.