
தை அமாவாசையில் பஞ்சகவ்ய விளக்கு ஏற்றினால் நல்லது. இந்த பஞ்சகவ்ய விளக்கானது பால், தயிர், நெய், கோமியம், சாணம், இவைகளால் செய்யப்பட்டது. உங்களால் முடிந்தால் இந்தப் பொருட்களையெல்லாம் வீட்டில் வாங்கி வைத்து, விளக்கு தயாரித்து, காய வைத்து விளக்கை ஏற்றி கொள்ளலாம். முடியாதவர்கள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் இந்த பஞ்சகவ்வியம் விளக்கை மொத்தமாக வாங்கி, வீட்டில் வைத்துக் கொள்ளலாம்.
இந்த விளக்கை வீட்டில் ஏற்றினால் ஒரு ஹோமம் செய்ததற்கு சமம். அதிலும் தை அமாவாசையான இன்று மாலை இந்த பஞ்சகவ்ய விளக்கை 2 எடுத்து, அதில் நெய் ஊற்றி திரி போட்டு வீட்டின் முக்கியமான பகுதியில் ஏற்ற வேண்டும். பூஜை அறை, வீட்டின் நடு பகுதி அல்லது நிலைவாசல் படி என எங்கு வேண்டுமானாலும் ஏற்றலாம். கண்டிப்பாக இதில் நெய்தான் ஊற்றி ஏற்ற வேண்டும். முக்கியமாக இந்த விளக்கத்தை ஒரு அகலமான தட்டில் வைத்து ஏற்ற வேண்டும்.
அப்படி முழு விளக்கும் எரிந்தவுடன் அந்த சாம்பலை எடுத்து விபூதியாக பூசிக்கொள்ளலாம். இதனால் வீட்டில் உள்ள பிரச்னைகள் மறைந்து சந்தோஷம் பெருகும் என்பது நம்பிக்கை. மேலும் இந்த தீபத்தை ஏற்றிய பின்பு ஏதாவது ஒரு பிரசாதம் செய்து இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைத்து குழந்தைகளுக்கு பிரசாதமாக கொடுக்கலாம்.
மேலும் பார்க்க… தை அமாவாசைக்கு பூஜை செய்ய நல்ல நேரம் எது?
யாகம் செய்த புண்ணியத்தை, பரிபூரணமாக அடைய அன்னதானமும் சேர்ந்திருந்தால் நல்ல பலனைத் தரும். இந்த பஞ்சகவ்ய விளக்கை அமாவாசை மட்டும் அல்ல வார வாரம் வெள்ளிக்கிழமைகளில் ஏற்றி வழிபடலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: