
ஆசியாவில் இறக்குமதி
இந்த போக்கானது ஆசியாவில் மீண்டும் தொடரலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. நடப்பு ஆண்டிலும் சீனாவும் இந்தியாவும் அதிகளவிலான எண்ணெய் இறக்குமதியை ரஷ்யாவில் இருந்து செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தென் கொரியா மற்றும் ஜப்பானும் இறக்குமதி செய்யாது எனலாம்.

தள்ளுபடி செய்யப்பட்ட எண்ணெய்
அறிக்கையின் படி, இந்தியா மற்றும் சீனாவில் இருந்து தள்ளுபடி செய்யப்பட்ட எண்ணெய், ரஷ்யா சரக்குகளை இறக்குமதி செய்யலாம்.
எஸ் &பி குலோபல் கமாடிட்டி அறிக்கையின் படி, இந்தியாவின் கச்சா இறக்குமதியில் 2.2% மட்டுமே ரஷ்யாவின் பங்கானது. எனினும் கடந்த நவம்பர் மாதத்தில் இந்தியாவின் முக்கிய சப்ளையர்களில் ஒன்றாக மாறியுள்ளது. இந்தியா நவம்பர் மாதத்தில் ஒரு நாளைக்கு 1 மில்லியன் பேரல் எண்ணெய் பெற்றுள்ளது, இது டிசம்பரில் 1.24 மில்லியன் பேரல்களாக அதிகரித்துள்ளது.

சீனாவின் இறக்குமதி
இதே ஜனவரி – நவம்பர் மாதங்களில் ரஷ்யாவிலிருந்து சீனாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியானது, ஆண்டுக்கு 10.2% அதிகரித்து, 79.78 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது.
இந்த போக்கானது ரஷ்யாவின் எண்ணெய் மீதான விலை உச்ச வரம்பு, மேற்கத்திய நாடுகளின் தடை இருந்தபோதிலும் வந்துள்ளது. ஆக இந்த போக்கு இனியும் தொடரலாம் என்று இருதரப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா எண்ணெய் ஊக்குவிப்பு
இந்தியா மற்றும் சீன சுத்திகரிப்பு நிறுவனங்கள் அதிக ரஷ்ய கச்சா எண்ணெய் சுத்திகரிப்புக்காக விரும்புகின்றன. தற்போது சீனாவில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில், கச்சா எண்ணெய் தேவையினை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. இது சீனாவில் தேவையை அதிகரிக்க வழிவகுக்கலாம். இது ரஷ்யாவின் எண்ணெய் சப்ளையை ஊக்குவிக்கலாம்.

33 மடங்கு அதிகரிப்பு
கடந்த ஆண்டை காட்டிலும் ரஷ்யாவிடம் இருந்து 33 மடங்கு அதிகமாக கச்சா எண்ணெயை இந்தியா வாங்குகிறது. ரஷ்யா – உக்ரைன் பிரச்சனைக்கு மத்தியில், அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு வாங்குவதை அந்த நாடுகள் முற்றிலும் நிறுத்தி விட்டன.

இந்தியாவின் சராசரி இறக்குமதி
ரஷ்யாவிடம் இருந்து சராசரியாக தினசரி 120 பேரல்கள் கச்சா எண்ணெயை இந்தியா வாங்குகிறது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 33 மடங்கு அதிகம் எனலாம். இந்த விகிதமானது நடப்பு ஆண்டு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எது எப்படியோ இந்தியாவில் எரிபொருட்கள் விலை குறைய இது காரணமாக அமைந்தால் நன்றாகத் தான் இருக்கும் எனலாம்.