
இன்றைக்கு பேருந்து, கார்களில் எத்தனை வசதிகள் இருந்தாலும் அதில் நெடுந்தூரம் பயணிப்பது என்பது அனைவருக்கும் ஏற்றதாக இருக்காது. உங்களது பயணத்தை நீங்கள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல், சந்தோஷமாக மேற்கொள்ள வேண்டும் என்றால், ரயில் பயணம் தான் உங்களுக்கு ஏற்றதாக அமையும். இதோடு குறைந்த செலவில் உடல் வலி எதுவும் இல்லாமல் செல்வதற்கு ஏற்றவகையில் ரயில் பயணம் நிச்சயம் அமையும். அனைத்து தரப்பட்ட மக்களும் பயன்படுத்தும் வகையில் பல வசதிகள் இந்திய ரயில்வே துறையில் இடம் பெற்றுள்ளது. குறிப்பாக நீங்கள் எந்த நாள் மற்றும் நேரத்தில் பயணிக்க வேண்டும் என்பதற்கு ஏற்ப ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.