
சமீப காலமாக இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே விவாகரத்து விகிதம் அதிகரித்து வருகிறது. ஆனால், திருமண உறவை முறித்துக் கொள்ள வேண்டும், விவாகரத்து செய்ய வேண்டும் என்ற முடிவை எடுப்பது அவ்வளவு எளிதல்ல. ஒரு சிலர் விவாகரத்து செய்யலாம் என்ற முடிவை எடுக்க முடியாமல் தடுமாறுவார்கள். திருமண உறவில் இருக்கும் பிரச்சனையை எப்படியாவது சரி செய்து விடலாம் அல்லது உறவில் இருந்து விலகி விடலாம் என்ற முடிவு எடுப்பதில் பல தடுமாற்றங்கள் இருக்கும். இதே போல தான் ஒரு பெண் விவாகரத்து செய்யலாமா வேண்டாமா என்று தடுமாறிக் கொண்டிருந்தார்.செயற்கை நுண்ணறிவு என்று கூறப்படும் ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்சிடம் தனது கணவரை விவாகரத்து செய்யலாமா என்ற கேள்வியை கேட்டுள்ளார்.
மனிதர்கள் உருவாக்கியது தான் தொழில்நுட்பம் என்றாலும் தொழில்நுட்பத்தில் செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. ஆர்டிபிஷியல் இன்டெலிஜன்ஸ் மனிதர்களை விட மிகவும் நுட்பமான அறிவும் திறனும் கொண்டது என்பதை மறுக்க முடியாது. பல வகையான பிரச்சனைகளுக்கும் செயற்கை நுண்ணறிவிடம் தீர்வு மற்றும் பதில்கள் உள்ளன. இதில் உறவு சிக்கல்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ChatGPT என்பது சமீப காலத்தில் பிரபலமாக இருக்கும் செயற்கை நுண்ணறிவு, உறவில் ஏற்படும் சிக்கல்கள், பிரச்சனைகள் குறித்த தீர்வுகளை சொல்கிறது. இதில், சாரா என்ற 37 வயது ஐடி ஊழியர், தனது கணவரை விவாகரத்து செய்யலாமா வேண்டாமா என்று chatgptஇடம் கேட்டுள்ளார்.
சாராவுக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இவருடைய பிரச்னை, ஆறு மாதங்களாக இவர் மற்றொரு நபருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார் என்பது தான். சாராவின் கணவருக்கு இது தெரிய வந்தது, இதனால் தொடர்ந்து வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்த நிலையில், இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று இருவரும் முடிவு செய்திருந்தனர். திருமண உறவை நீடிக்கலாமா அல்லது தன்னுடைய கணவனை விட்டு புதிய காதலனிடம் செல்லலாமா என்று சாராவால் முடிவு செய்ய முடியவில்லை.
மிரர் வெளியிட்ட செய்தியின்படி, சாரா தனது சூழ்நிலையை விவரித்து ChatGPTஇடம் ஒரு கதை எழுதுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கதையில் சுவாரஸ்யமில்லாத, பிரச்சனையாக இருக்கும் திருமண உறவு பற்றியும், புதிய காதலன் மற்றும் உறவு எவ்வளவு உற்சாகமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். அந்த கதையின் அடிப்படையில், ஐ எழுதியது ஒரு அழகான ஃபேரிடேல்! அழகான ஒரு தீர்வுடன் செயற்கை நுண்ணறிவு சாராவுக்கு எழுதிய கதை சாரா என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதற்கு உதவியிருக்கிறது. ஆனால் சாராவால் ஐ சொன்ன முடிவை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சரி அந்த ஐ என்னதான் முடிவு சொல்லி இருந்தது? சாராவுக்கு எது மகிழ்ச்சியாக இருக்கிறதோ அதைத்தான் செய்ய வேண்டும் என்றும், அவருடைய மகிழ்ச்சிக்காக அவருடைய கணவரைப் பிரியலாம் என்றும் சொல்லுங்கள். இதைத்தான் சாராவும் செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ChatGPT சாராவின் குழப்பத்தை மற்றும் அவருக்கு எது மகிழ்ச்சியைத் தரும் என்பதை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் சாராவுக்கு தீர்வு அளித்துள்ளது!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV போன்றவற்றைக் காணலாம்.