
நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் குடும்ப பார்வையாளர்களின் பேராதரவால் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதாக கூறப்படுகிறது. அதற்கேற்ப இந்தப் படத்தைத் தயாரித்துள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் படத்தின் வசூல் குறித்த தகவல்களை நிறுவனம் வெளியிட்டது. சமீபத்தில் கூட இந்தப் படம் உலக அளவில் ரூ.210 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, அதுபெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
வாரிசு படம் தெலுங்கில் வாரிசுடு என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியிருந்தது. ஆந்திரா தெலங்கானாவிலும் இந்தப் படத்துக்கு நல்ல வசூல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைடுத்து சமீபத்தில் ஹைதராபாத்தில் வாரிசு படத்தின் வெற்றியை நடிகர் விஜய் உட்பட படக்குழுவினர் கேக் வெட்டிக்கொண்டனர்.
முன்னதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் இரண்டு பாடல்களைத் தவிர படத்தில் நடிப்பதற்கு ஏதும் பெரிதாக வாய்ப்பில்லாத படத்தை எதற்காக ஒப்புக்கொண்டீர்கள் என ராஷ்மிகாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஷ்மிகா, ”படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பில்லை என தெரிந்துதான் சம்மதித்தேன். விஜய் சாருடன் நடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். விஜய் சாரை நீண்ட காலமாக ரசித்து வந்திருக்கிறேன். ஒரு நடிகராக சக நடிகர்களிடம் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைப்பேன் என குறிப்பிட்டிருந்தார்.
போட்ரா பிஜிஎம் ஆ 🔥#MegaBlockbusterVarisu உலகம் முழுவதும் 11 நாட்களில் 250Crs+ வசூலித்தது நன்பா 🤩#தளபதி @நடிகர் விஜய் ஐயா @இயக்குனர் வம்சி @SVC_official @இசை தமன் @iamRashmika @TSeries #வரிசு #வாரிசு பொங்கல்#VarisuHits250Crs pic.twitter.com/I1UJgRIGoJ
— ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் (@SVC_official) ஜனவரி 23, 2023
இந்த நிலையில் வாரிசு திரைப்படம் 11 நாட்களில் உலக அளவில் ரூ.250 கோடி வசூலித்துள்ளதாக ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதையடுத்து மெகா பிளாக்பஸ்டர் வாரிசு என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்துவருகிறார்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: