
அதிவேக ஜியோ 5 ஜி இணையச் சேவை நேற்று தமிழ்நாட்டின் திருப்பூர் உட்பட 16 நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இதனுடன் இந்தியாவில் மொத்தம் 134 நகரங்களில் 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் வழங்கி வருகிறது. அண்மையில், தமிழ்நாட்டின் மதுரை, கோவை, திருச்சி 6 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து ஜியோவின் தமிழ்நாடு பிரிவு வர்த்தகத் தலைவர் ஹேமந்த் குமார் கூறுகையில், “ஜியோ 5ஜி சேவையை தமிழ்நாட்டிற்கு அளித்ததில் மகிழ்ச்சி. 5 ஜி சேவை நம் வாழ்க்கை முறையையே மாற்றியமைக்க போகிறது என்றால் அது மிகையாகாது. 5ஜி என்றால் அதிவேக இணைய சேவை. அப்படியென்றால் டவுன்லோட் என மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
1 ஜிபிபிஎஸ் என்பதால் பலரும் ஒரே நேரத்தில் சிக்கலின்றி 5 ஜி சேவையைப் பெற முடியும். அது குறைவாக இருந்தால் பலருக்கும் நெட்வொர்க் கிடைப்பதில் பிரச்னை ஏற்படும். விவசாயம், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல துறைகளுக்கு 5 ஜி சேவை முக்கியமானது” என்று தெரிவித்தார்.
700 மெகாஹெர்ட்ஸ் ஜியோவிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிட்ட அவர், சென்னை, மதுரை எல்லாம் மிகப்பழமையான நகரங்கள் என்பதால் வீடுகள் நெருக்கமாகவும், தெருக்கள் குறுகலாகவும் இருக்கும். அந்த பகுதிகளுக்கு நிறைய டவர்கள் வைக்க முடியாது. 700 megahertz இருப்பதால் அந்த இடங்களில் ஜியோ மூலம் எளிமையாகவே நெட்வொர்க் கிடைத்துவிடும். ஜியோ 4 ஜியின் தொழில்நுட்பங்கள் அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்றும் கூறினார்.
5ஜி சேவையை பெறுவது எப்படி?
நீங்கள் ஜியோ பயன்பாட்டாளராக இருந்தால் உங்கள் பகுதியில் 5ஜி சேவை இருந்தால் அதற்கான அழைப்பு நோட்டிபிகேஷன் உங்களுக்கு வரும். அது எளிமையான நடைமுறைதான். அதனை சரியாக செய்தால் உடனடியாக 5ஜி சேவைக்கு மாறுவீர்கள். உங்கள் நெட்வொர்க் வேகமாக இருக்கும். சீக்கிரமாகவே டவுன்லோடு செய்துகொள்ளலாம். அந்த வித்தியாசங்களை நீங்களே உணர்வீர்கள் என்று கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: