
உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
‘சதுரங்க வேட்டை’ என்ற தரமான படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இயக்குனராக தடம் பதித்தவர் ஹெச்.வினோத். இதையடுத்து கார்த்தி நடிப்பில் ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கினர். இந்தப்படங்களுக்கு கிடைத்த வெற்றியால் தொடர்ந்து அஜித்தை வைத்து மூன்று படங்களை இயக்கும் வாய்ப்பினை கைப்பற்றினார் வினோத்.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து அஜித், எச். வினோத், போனி கபூர் கூட்டணியில் மூன்றாவது முறையாக ‘துணிவு’ படம் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தின் முதல் பாதி அஜித் ரசிகர்களுக்கான ட்ரீட்டாகவும், இரண்டாம் பாதி முழுக்க வங்கி கொள்ளையின் பின்னணியில் அங்கு நடக்கும் மியூச்சுவல் பண்ட் மோசடி, கிரெடிக் கார்டு ஏமாற்று வேலைகளை அனைவருக்கும் புரியும்படியாக படமாக்கியுள்ளதாகவும் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
வினய்: வினய்யுடனான காதலை உறுதி செய்த பிரபல நடிகை: தீயாய் பரவும் புகைப்படம்.!
இந்நிலையில் எச். வினோத்தின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. வினோத் தனுஷுக்கு ஒரு கதையும், யோகி பாபுக்கு ஒரு கதையும் சொல்லியுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரில் ஒருவர் படத்தை வினோத் துவங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கமலை வைத்து எச். வினோத் படம் இயக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப்படத்தை முடித்துவிட்டே எச். வினோத் அடுத்த படங்களை இயக்குவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. கமல் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்ததும் கமல், வினோத் இணையும் படம் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கமல் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Thunivu: ஏகே ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட்: ‘துணிவு’ இசையமைப்பாளர் அதிரடி அறிவிப்பு.!