
டாப் 4 டெக் நிறுவனங்கள்
அதிலும் முக்கியமாக உலகின் டாப் 4 பெரிய டெக் நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டு துவங்கி 20 நாள் மட்டுமே ஆன நிலையில் அமேசான் 18000 ஊழியர்கள், மைக்ரோசாப்ட் 1000 ஊழியர்கள், கூகுள் 12000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

பேஸ்புக்
2022ல் பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா 11000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது, அமேசான் 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

என்ஆர்ஐ டெக் ஊழியர்கள்
இந்த நிலையில் பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்ட NRI-கள் இந்தியாவுக்குத் திரும்பி வர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளனர்.

மெட்டா ஊழியர்
பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா 2022 ஆம் ஆண்டு இறுதியில் பணிநீக்கம் அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், வேறு வேலைவாய்ப்புக்கு மாறாத பல இந்தியர்கள் தாய்நாட்டிற்குத் திரும்ப முடிவு செய்து இந்தியா வந்துள்ளனர்.

1000 ஊழியர்கள்
FAANG நிறுவனங்கள் சராசரியாக 1000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. இது நிறுவனத்தின் வழக்கமான செயல்பாட்டிற்கு எந்த இடையூறும் இல்லாமல் செயல்படுகிறது, இதனால் நாம் அனைவரும் எவ்வளவு தேவையற்றவர்களாக இருக்கிறோம் எனத் தோன்றுகிறோம் எனப் பதிவிட்டு உள்ளார்.

மன அழுத்தம்
இந்தப் பணிநீக்கம் மூலம் வெளிநாட்டில் இருக்கும் இந்திய ஊழியர்களுக்கு எந்த அளவுக்கு மன அழுத்தத்தைத் தருகிறது என்பதை நான் விவரிக்கத் தேவையில்லை. இதேவேளையில் இந்தியாவில் டெக் துறை மிகவும் சிறப்பாக உள்ளது.

இந்திய ஸ்டார்ட்அப்
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பல புதிய சவால்களை இணைந்து எதிர்கொண்டு புதுப் புதுச் சொல்யூஷன்களை மக்களுக்கு அளித்து வருகின்றனர். இந்தியா செல்ல இதுதான் சரியான நேரம் எனப் பதிவிட்டு உள்ளார்.