
பக்தர்களின் நன்கொடை மூலம் ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் 2068 புதிய கோவில்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானம் கட்டி வருகிறது.
இது குறித்து திருப்பதி மலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி, “ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பக்தர்களின் நன்கொடை உதவியுடன் தேவஸ்தான நிர்வாகம் 2068 சிறிய அளவிலான புதிய கோவில்களில் இந்து தர்ம பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக உள்ளது. புதிதாக கட்டப்படும் இந்த கோவில்களின் கட்டுமான பணிகள் இன்று ஆறு மாதத்திற்குள் முடிவடைந்து கும்பாபிஷேகம் நடத்தப்படும். இது தவிர மிகவும் பழமையான 150 கோவில்களை மறுசீரமைக்க தேவஸ்தான நிர்வாகம் 130 கோடி செலவு செய்கிறது” என்று அவர் கூறினார்.
மேலும், “ இந்த பணிகளுக்கான பணம் விஐபி தரிசன டிக்கெட் வாங்குவதற்காக பக்தர்கள் தேவஸ்தானத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு தலா பத்தாயிரம் ரூபாய் என்ற கணக்கில் நன்கொடை பணத்திற்கு செலவு செய்கிறார்கள் என்றும் அப்போது தெரிவித்தார்.
இந்து தர்ம பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பின்தங்கிய மக்கள் வசிக்கும் பகுதிகள், மீனவர் குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றில் புதிய கோவில்களை கட்டுவதுடன், பழைய கோவில்களை சீரமைக்கும் பணியிலும் தேவஸ்தான நிர்வாகம் ஈடுபட்டுள்ளது” என்றார்.
அதனைத் தொடர்ந்து பேசியவர், “தேவஸ்தான நிர்வாகம் மிகவும் வெளிப்படை தன்மையுடன் வருகிறது. பக்தர்கள் நன்கொடையாக வழங்கும் தலா பத்தாயிரம் ரூபாயில் ஒரு பகுதி தேவஸ்தான ஊழியர்களின் ஊதியத்திற்கும், மாநில அரசு திட்டங்களுக்கும் செலவு செய்யப்படுகிறது என்று கூறுவது தவறு.
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களில் பகுதி வாரியாக 2068 கோவில்களை கட்டும் பணியில் தேவஸ்தான நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் இதுபோல் கோவில்கள் கட்டப்படும்.
சமரசட்டா சேவா பவுண்டேஷன் ஒத்துழைப்புடன் 32 கோடி செலவில் 360 கோயில்கள் கட்டப்படுகின்றன. ஆந்திர மாநில அறநிலையத்துறையின் ஒத்துழைப்புடன் 100 கோடி ரூபாய் செலவில் 932 கோவில்களை கட்டும் பணி நடைபெறுகிறது. மேலும் 667 கோவில்களை கட்ட பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புதிதாக கோவில்களை கட்டுவதற்காக பக்தர்கள் விடுத்துள்ள வேண்டுகோள்களை பரிசீலிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன” என்றும் அவர் அப்போது கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: