
மேஷம்:
இன்று சிலர் மந்தமாக உணரலாம் மற்றும் வேலை செய்ய போதுமான உந்துதல் இல்லாமல் இருக்கலாம். இதனால் வேலையில் தாமதங்கள். உங்கள் கவலையைக் குறைக்க தியானம் செய்யலாம்.
அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு ஆல்பம்
ரிஷபம்:
விலைமதிப்பற்ற உறவுகளுக்கு கொஞ்சம் மெனக்கெட வேண்டும். உங்கள் வாழ்க்கைத்துணையுடன் கூடுதல் நேரம் செலவிட வேண்டும். சில நேரங்களில் அலை உங்களுக்கு எதிராக இருந்தால், பாதுகாப்பான தூரத்தில் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு பழைய மோட்டார் சைக்கிள்
மிதுனம்:
உங்கள் பொறுப்பை பகிர்ந்து கொள்ள புதிய நபர் வரக்கூடும். உங்கள் முன்னேற்றத்திற்கு இது மிகவும் உதவியாக இருக்கும். நிலுவையில் உள்ள பணிகளை இப்போதே முடிக்க முயற்சிக்கவும். சரியான நேரத்தில் கிடைக்கும் ஒரு நினைவூட்டல் உங்களை காப்பாற்றும்.
அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு கீ செயின்
கடகம்:
பரபரப்பான நேரங்களில் கூட, உங்கள் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்பதை மறக்காதீர்கள். இது தான் உங்களுக்கு மிகவும் முக்கியம். தலைமைப் பதவிக்கான வாய்ப்பு விரைவில் வரும்.
அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு முத்து
சிம்மம்:
நீங்கள் இதற்கு முன்பு யாரையாவது புண்படுத்தியிருந்தால், அவர்கள் உங்களை இன்னும் மன்னிக்காமல் இருக்கலாம். இப்போது சமரசம் செய்வதற்கு உகந்த நேரம். கல்லூரி நண்பர்களை சந்திக்க திட்டமிடலாம். அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு வானவில் நிறப் பொருள்
கன்னி:
வரவிருக்கும் சவால்களுக்கு தயாராக இருக்க வேண்டும். வெளிநாட்டிலிருந்து வாய்ப்பு உங்களைத் தேடி வரும். நாளின் முடிவில் நீங்கள் தனிமையாக இருப்பதை அனுபவிக்கலாம்.
அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு காபி ஷாப்
துலாம்:
ஒரு சிறிய பிரச்சனை காரணமாக வீட்டில் இருக்கும் அமைதியான சூழல் பாதிக்கப்படலாம். திட்டமிடப்படாத கூடுதல் வேலையை நீங்கள் செய்ய நேரிடும். பொழுதுபோக்கு சார்ந்த புதிய விஷயம் உங்கள் கவனத்தை திசை திருப்பும்.
அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு கண்ணாடி குடம்
விருச்சிகம்:
வேலையில் தற்போது உருவாகும் சூழ்நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும். இப்போது உங்கள் ஈடுபாடு, பின்னாளில் பயனுள்ளதாக இருக்கும். அக்கம்பக்கத்தில் ஏற்படும் குழப்பம் பலவிதமான இடையூறுகளை ஏற்படுத்தலாம்.
அதிர்ஷ்ட அடையாளம் – பேட்டரிகளின் தொகுப்பு
தனுசு:
எந்த செய்தியும் சில நேரங்களில் நல்ல செய்தியாகவே இருக்கலாம். இந்த நாளின் ஓட்டம் எப்படி செல்கிறதோ அதே ஓட்டத்துடன் செல்லுங்கள். நீங்கள் விரைவில் ஓய்வு பெற விரும்பலாம். நீங்கள் தொலைதூரத்தில் இருக்கும் நபருடன், அர்த்தமுள்ள உரையாடல்களில் ஈடுபடலாம்.
அதிர்ஷ்ட அடையாளம் – உங்களுக்குப் பிடித்த பழைய நாவல்
மகரம்:
கூட்டணிக்கான புதிய வாய்ப்புக்கு நீங்கள் தயாராகலாம். உங்களுடைய பாதை தெளிவாக இருக்கலாம், ஆனால் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் எதிர்ப்பார்ப்புக்கு, உங்களின் கீழ் பணிபுரிபவர் ஒத்துழைக்காமல் போகலாம்.
அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு செப்பு கண்ணாடி
கும்பம் :
எந்த விஷயங்களை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இருந்தால் இந்த நாள் எளிதாக இருக்கும். இன்று சோர்வாக இருப்பீர்கள், எனவே தேவையான அளவுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.
அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு தானிய கிண்ணம்
மீனம் :
ஒரு நல்ல நண்பருக்கு அவர்களின் குடும்ப விஷயங்களில் உங்கள் உதவி தேவைப்படலாம். உங்கள் சக ஊழியர்களை அதிகம் விமர்சிக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். கடந்த காலத்தில் நீங்கள் சேமித்த நிதி இப்போது உதவியாக இருக்கும்.
அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு கிறிஸ்டல் ஜாடி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: