
மேஷம்:
இன்றைக்கு உங்கள் வாழ்க்கையில் முக்கியமான விஷயத்தில் எதுவும் உடன்பாடு எட்டவில்லை என்றால், அதை முயற்சிக்காதீர்கள். இல்லையெனில் தேவையில்லாத பிரச்சனையை நீங்கள் சந்திக்க நேரிடும். நிதானமாக செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி நிச்சயம். திட்டமிட்ட பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வாழ்க்கையில் குறுகிய பயணம் மேற்கொள்ளும் நிலை ஏற்படும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஆய்வகங்கள்.
ரிஷபம்:
இன்றைக்கு பண வரவு ஏற்படும் நாளாக அமையும். நீங்கள் மேற்கொள்ளும் சிறிய பணிகளுக்குக் கூட அங்கீகாரம் பெற்று பெரிய வாய்ப்புகளை நீங்கள் அடைய நேரிடும். தேவையில்லாத மன அழுத்தம் உங்களை சற்று பதட்டமாக வைத்திருக்கலாம். சிறிது நேர ஓய்வு உங்கள் மனதை நிம்மதியாக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஜெட் பிளாண்ட்.
மிதுனம்:
வாழ்க்கையில் இன்று மேற்கொள்ளும் அனைத்து விஷயங்களையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத வெளிநாட்டு வேலைகளை நீங்கள் பெறுவீர்கள். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். நீண்ட காலமாக எதிர்ப்பார்க்கப்பட்ட பணிக்கு ஒப்புதல் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலவி வந்தால் பல பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு இரும்பு கோபுரம்
கடகம்:
இன்றைக்கு எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். நல்ல அபிப்ராயத்தை உருவாக்கும் சுவாரசியமான ஒருவரை வாழ்க்கையில் சந்திக்கும் சூழல் ஏற்படும். முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு எப்போதும் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கவனமாக இல்லாவிட்டால் விலைமதிப்பற்ற ஒன்றை இழக்க நேரிடும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு மெத்தை
சிம்மம்:
இன்றைக்கு பல தடைகள் வந்தாலும் வெற்றியுடன் எதிர்க்கொள்ளும் நாளாக அமையும். வழக்கத்தை விட இன்னும் பல விஷயங்களை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். எப்போதும் எதையும் தன்னம்பிக்கையுடன் எதிர்க்கொள்ளும் மனநிலை ஏற்படும். பல நாள்களாக தடை செய்யப்பட்ட பணம் மீண்டும் உங்களிடம் வரும் வாய்ப்புள்ளது.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கோடுகள்
கன்னி:
எந்த காரியத்தையும் நீங்கள் தள்ளிப்போட வேண்டும். பிரச்சனை இல்லாமல் முடிக்க வேண்டும் என்றால் முன்கூட்டியே செய்து முடிக்க வேண்டும். முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் உங்கள் கவனம் மேம்படும். நெருங்கிய நண்பர்களிடமிருந்து சாதகமான செய்தியை நீங்கள் பெறுவீர்கள்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு காபி
துலாம்:
முதலீடுகளில் கவனத்துடன் இருக்கவும். நீங்கள் மேற்கொள்ளும் சில முதலீடுகளால் பல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடும். வீட்டில் யாராவது உங்களிடம் ஆலோசனை கேட்டால், அலட்சியம் கொள்ளாமல் தீவிரமாக எடுத்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு முயல்
விருச்சிகம்:
வேலை தொடர்பாக பயணம் மேற்கொள்ளும் சூழல் இன்று ஏற்படும். வீட்டில் சில சவால்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம். எதையும் நிதானமாக செய்து முடிக்கவும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் மூலம் நல்ல செய்தியைப் பெறுவீர்கள்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு கால்பந்து போட்டி
தனுசு:
இன்றைக்கு நண்பர்கள் மூலம் கிடைக்கும் புதிய அறிமுகம் வாழ்க்கையில் வெற்றிக்கு வழிவகுக்கும். இருந்தபோதும் முழுமையான வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு நன்றாகப் படிக்க வேண்டும். ஆன்லைன் கோர்ஸ் அல்லது டுடோரியலை முயற்சிப்பதன் மூலம் சுவாரசியமான அனுபவத்தைப் பெறலாம்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு சோலார் பேனல்
மகரம்:
இன்றைக்கு நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். சில எரிச்சலூட்டும் நபர்களிடமிருந்து எப்போதும் விலகி இருக்க வேண்டும். இதையே நீங்கள் குறிக்கோளாகக் கொண்டிருந்தாள், அதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். பிறரால் உங்களுக்குத் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும் என்பதால். உங்களது உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ? அதை மட்டும் கேட்டு நடப்பது நல்லது.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு மலர் குவளை
கும்பம்:
இன்றைக்கு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் போதுமானதாக இருக்கும். வேலைகளைத் தீவிரமாகச் செய்யவும். உங்களின் சக்திக்கு மேலான ஒன்றை நீங்கள் இலக்காகக் கொள்ளலாம். உங்களின் தொழில்துறையைச் சேர்ந்த மூத்தவர்களால் ஆலோசனையைப் பெற்று வெற்றி காண்பீர்கள்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு தேனீ
மீனம்:
வாழ்க்கையில் நீங்கள் மேற்கொள்ளும் புதிய முயற்சி உங்களை சிறந்த மனிதராக்கும். யாரோ தூரத்தில் இருந்து உங்களின் செயல்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருப்பதால், சிறப்பாக செயல்பட முயலுங்கள். கூட்டு உழைப்பு உங்களை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்லும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – நீல மண்பாண்டங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: