
மேஷம்:
உங்கள் கடந்தகால முயற்சிகள் சரியான வகையில் இருந்ததற்கு இன்று நீங்கள் பாராட்டுகளைப் பெற வாய்ப்புள்ளது. தேவையில்லாமல் உங்களை யாராவது குறைகூறினால் அதை புறக்கணிக்கவும். உங்கள் அலுவலக வேலையில் இன்று முழுகவனம் செலுத்த வேண்டும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஃப்ளோரல் டிரெஸ்
ரிஷபம்:
இதுநாள் வரை சிக்கலை சந்தித்து வந்த அல்லது தடைபட்ட பணவரவு இன்று மேம்படும். இன்று ஏற்கனவே பிளானில் இருக்கும் பயண திட்டங்கள் பின்னர் ஒத்தி வைக்கும் நிலை. ஒரே நேரத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டிய நாள். ஒரு முற்போக்கான எதிர்கால திட்டமிடலுக்கு ஏற்ற நல்ல அறிகுறிகள் இன்று தென்படும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஸ்ட்ராபெர்ரிகள்
மிதுனம்:
நீங்கள் செய்ய விரும்பும் செயல்களைச் செய்து முடிக்க இன்று நீங்கள் போதுமான ஆற்றலைப் பெறுவீர்கள். உங்கள் உடன்பிறந்தவருக்கு உங்களது வழிகாட்டுதல் தேவைப்படலாம். நீங்கள் எதிர்பார்க்காத ஒருவரின் திடீர் வருகை மாலை நேரத்தை இனிமையாக்கலாம்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – சில்வர் வயர்
கடகம்:
இன்று நீங்கள் ஷாப்பிங் செல்ல திட்டமிட்டு இருந்தால் அதில் நீங்கள் ஆர்வத்துடன் ஈடுபடுவது உங்களை மகிழ்ச்சியாக வைக்கும். வேலையில் முன்வைக்கப்படும் காலக்கெடுவை மனதில் வைத்து செயல்படுங்கள். வீட்டு வேலைகளையும் பார்த்து வழக்கமான வேலைகளில் ஈடுபடுவது சில தடைகளை உருவாக்கலாம்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மெட்டாலிக் ஆர்ட்
சிம்மம்:
இன்று டீம்ஒர்க் மீது கவனம் செலுத்துங்கள், நீங்கள் ஒத்துழைக்க வாய்ப்பு கிடைத்தால் அதை சரியாக பயன்படுத்த வேண்டும். பணியிடத்தில் ஏற்படும் வாக்குவாதம் உங்கள் நாளை எதிர்மறையாக பாதிக்கலாம். முன்கூட்டியே விஷயங்களை மதிப்பிட வேண்டாம்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கலர் பாட்டில்
கன்னி:
குறுகிய கால திட்டமிடல் இன்று பயனுள்ளதாக இருக்கும். இன்றிரவு விருந்தினர்களை வரவேற்க நீங்கள் தயாராக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாரையாவது மகிழ்விக்க வேண்டும் என்றால் அதற்கு இன்று சரியான நாள்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு குரங்கு
துலாம்:
குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவுகளுடன் வீட்டில் நேரம் செலவிடுவது இன்று நல்ல நாள். வேலைகளில் உங்கள் பங்களிப்பு மதிப்பாய்வு செய்யப்படும். திடீர் மன அழுத்தம் உங்களை சோர்வடைய செய்யலாம்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மர பெட்டி
விருச்சிகம்:
உங்களது பழைய ஆர்வத்தை நீங்கள் கை விடமாட்டீர்கள் என்று நீங்களே இன்று சபதம் செய்து கொள்ளுங்கள். எனவே மீண்டும் அவற்றில் நீங்கள் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை ஆராய வேண்டிய சூழல் இன்று ஏற்படும். இன்றைய நாள் ஒரு முற்போக்கான ஆனால் மந்தமான ஆற்றலைக் கொண்டுள்ளது, நீங்கள் எதைத் தொடங்கினாலும் அதை இன்று நீங்கள் மெதுவாக முடிக்க முடியும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஐஸ்கிரீம்
தனுசு:
தொலைதூரம் அல்லது வெளிநாட்டில் இருந்து உங்களுக்கு வரும் அழைப்பு ஒன்று உங்கள் நாளை சிறப்பாக மாற்றும். உங்களுக்கு நெருக்கமானவர் ஒருவருக்கு உங்களிடமிருந்து சில உடனடி பதில்கள் தேவைப்படலாம். ஒரு குறுகிய தூர திட்டம் இன்று உங்களுக்கு பலனளிக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பந்து
மகரம்:
ஒரு சில புதிய சுகாதார நடைமுறைகளை தொடங்க இன்று ஒரு நல்ல நாள். ஒரு புத்தகம் அல்லது கட்டுரை உங்களை இவ்வாறு செய்ய உங்களுக்கு உத்வேகம் அளிக்கும். தொலைந்து போய்விட்டதாக நீங்கள் கருதும் ஒன்று மீண்டும் உங்களுக்கு கிடைக்கலாம்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஈ
கும்பம்:
நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தீர்களோ, அதை வெற்றிகரமாக செய்து முடிப்பதற்கான சில அறிகுறிகளை நீங்கள் பெறலாம். இன்றைய நாள் கலவையான பலன்களை கொண்டுள்ளது. உங்கள் உள்ளுணர்வு சொல்வதை பின்பற்றி, உங்கள் எதிர்மறை உணர்ச்சிகளை கண்காணித்து கொள்வது டென்ஷனை குறைக்க உதவும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – பனித்துளிகள்
மீனம்:
ஒரு மேலதிகாரி உங்களுக்கு வழங்கும் சரியான ஆலோசனை உங்கள் நேரத்தை நிறைய மிச்சப்படுத்தும். நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க முடியும் என்ற நம்பிக்கை உங்களுக்கு ஏற்படும். குடும்பத்தில் ஒருவருக்கு இன்று மருத்துவ உதவி தேவைப்படலாம்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஏரி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: