
இந்திய இன்னிங்ஸ்:
முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ஓபனர்கள் ரோஹித் ஷர்மா 101 (85), சுப்மன் கில் 112 (78) இருவரும் சிறந்த துவக்கத்தை தந்தார்கள். அடுத்து, ஹார்திக் பாண்டியா 54 (38) அரை சதம் கடந்தார். மேலும், விராட் கோலி 36 (27), ஷர்தூல் தாகூர் 25 (17) போன்றவர்களும் ஓரளவுக்கு ரன்களை சேர்த்ததால், இந்திய அணி 50 ஓவர்களில் 385/9 ரன்களை குவித்து அசத்தியது.
நியூசிலாந்து இன்னிங்ஸ்:
இலக்கை துரத்திக் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் ஓபனர் டிவோன் கான்வே 138 (100) சிறப்பாக விளையாடி அசத்தினார். அடுத்து ஹென்ட்ரி நிகோலஸ் 42 (40), சாண்ட்னர் 34 (29), பிரெஸ்வெல் 26 (22) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஆட்டமிழந்தனர். முக்கிய வீரர்கள் பின் ஆலன் 0 (2), டாம் லதாம் 0 (1) ஆகியோர் டக் அவுட் ஆனதுதான், அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
இறுதியில், நியூசிலாந்து அணி 41.2 ஓவர்லயில் 295/10 ரன்களை மட்டும் சேர்த்து, 90 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
தோல்விக்கு முக்கிய காரணம்:
நியூசிலாந்து அணி 25 ஓவர்களில் 184/2 ரன்களை சேர்த்து, வலுவான நிலையில்தான் இருந்தது. இப்போது பனுவீசிய ஷர்தூல் தாகூர் மிட்செல் 24 (31), டாம் லதாம் 0 (1) ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி அசத்தினார். இதனால், நியூசிலாந்து அணி 184/4 என திடீரென்று திணற ஆரம்பித்தது.
டாம் லதாம் பேட்டி:
இப்போட்டி முடிந்த பிறகு பேசிய நியூசிலாந்து அணிக் கேப்டன் டாம் லதாம், ”நாங்கள் பந்துவீச்சில் சிறப்பாக செயல்படவில்லை. 380 ரன்களை துரத்தியபோது துவக்கத்தில் சிறந்த பார்ட்னர்ஷிப் அமைத்தோம். ஆனால், திடீரென அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததால், தோல்வியை தழுவினோம்”
”ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்பு, இந்தியாவில் விளையாடிய கடைசி ஒருநாள் போட்டி இதுதான். இத்தொடர் மூலம் எங்களுக்கு புரிதல் கிடைத்துள்ளது. இந்தியாவில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை கண்டுபிடித்துவிட்டோம். இனி, இதற்கேற்றாற்போல், அணியை கட்டமைத்து விளையாடுவோம்” எனக் கூறினார்.