
பிராண்ட் பைனான்ஸ்
பிராண்ட் பைனான்ஸ் ஒவ்வொரு ஆண்டும் நிறுவனங்களின் பல்வேறு காரணிகளை ஆய்வு செய்து பட்டியலை வெளியிடுகிறது, அப்படி இந்த ஆண்டுப் பிராண்ட் கார்டியன்ஷிப் இன்டெக்ஸ் 2023 பட்டியலை வெளியிடுகிறது. இந்தப் பட்டியலில் உலகின் டாப் சிஐஓ பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

ஜென்சன் ஹுவாங்
இந்த டாப் 10 பட்டியலில் Nvidia-வின் ஜென்சன் ஹுவாங் முதல் இடத்தையும். 2வது இடத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியும் இடம்பெற்றுள்ள நிலையில்,3வது இடத்தில் மைக்ரோசாப்ட் சத்ய நாதெல்லா உள்ளார். கடந்த ஆண்டுச் சத்ய நாதெல்லா 2வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

டாப் 10 பட்டியல்
இதைத் தொடர்ந்து அடோப் நிறுவனத்தின் சாந்தனு நாராயண் 4வது இடத்திலும், கூகுளின் சுந்தர் பிச்சை 5வது இடத்திலும், டெலாய்ட் நிறுவனத்தின் புனித் ரென்ஜென் 6வது இடத்திலும் உள்ளனர். இதைத் தொடர்ந்து 7வது இடத்தில் Fabrizio Freda நிறுவனத்தின் தலைவர் Estee Lauder, 8வது இடத்தில் டாடா சான்ஸ் தலைவர் என் சந்திரசேகரன், 9வது இடத்தில் DBS தலைவர் பியூஷ் குப்தா, 10வது இடத்தில் டென்சென்ட் தலைவர் Ma Huateng இடம்பெற்றுள்ளார்.

லீனா நாயர்
இதைத் தொடர்ந்து 11வது இடத்தில் சேனல் நிறுவனத்தின் தலைவரான லீனா நாயர் இடம்பெற்றுள்ளார். இவர் தான் இப்பட்டியலில் முன்னணி இடத்தைப் பெற்ற பெண் தலைவர் ஆவார். மேலும் 100 சிஐஓக்கள் அடங்கிய இப்பட்டியலில் வெறும் 7 பெண்கள் மட்டுமே உள்ளனர்.

பிற இந்திய சிஐஓ-க்கள்
மேலும் 100 சிஐஓ-க்கள் அடங்கிய இப்பட்டியலில் மஹிந்திரா குரூப்-ன் ஆனந்த் மஹிந்திரா, ஏர்டெல்-ன் சுனில் மிட்டல், எஸ்பிஐ வங்கியின் தினேஷ் குமார் காரா, இன்போசிஸ் சலில் பாரிக் ஆகிய இந்திய தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

டெக் மற்றும் டிஜிட்டல் மீடியா துறை
100 பேர் அடங்கிய இப்பட்டியலில் 50 சதவீதம் பேர் டெக் மற்றும் டிஜிட்டல் மீடியா துறை நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளனர். இதேபோல் டாப் 10 பட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.மேலும் டாப் 100 சிஐஓ-க்கள் இன்ஜினியரிங் மற்றும் பைனான்ஸ் பட்டம் படித்தவர்களாக உள்ளனர். 100 பேர் அடங்கிய இப்பட்டியலில் 50 சதவீதம் பேர் டெக் மற்றும் டிஜிட்டல் மீடியா துறை நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளனர். இதேபோல் டாப் 10 பட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.மேலும் டாப் 100 சிஐஓ-க்கள் இன்ஜினியரிங் மற்றும் பைனான்ஸ் பட்டம் படித்தவர்களாக உள்ளனர்.

அமெரிக்கா
நாடுகள் அடிப்படையில் பார்த்தால் இந்தப் பட்டியலில் அதிக எண்ணிக்கையில் சிஐஓக்கள் கொண்ட நாடு அமெரிக்கா, இதைத் தொடர்ந்து சீனா உள்ளது. இந்திய சிஐஓக்கள் சிறந்து செயல்பட்டாலும் எண்ணிக்கை அடிப்படையில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது.

6 இந்தியர்கள்
மேலும் டாப்10 பட்டியலில் 2 இந்திய சிஐஓக்கள், 4 இந்திய அமெரிக்க வம்சாவளி சிஐஓக்கள் இடம்பெற்றுள்ளனர். டாப் 100 சிஐஓக்கள் பட்டியலில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர் 6 பேரும், ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த 3 பேரும் இடம்பெற்றுள்ளனர்.