
டெல்லி: குஜராத் கலவரம் தொடர்பாக மோடி வெளியிட்ட பிபிசி ஆவணப்படத்தின் யூடியூப், டுவிட்டர் இணைப்புகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பிபிசிசிப்படத்தின் யூடியூப், டுவிட்டர், லிங்க் ஆவணங்களை ஒன்றிய அரசு முடக்கியது. குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த கலவரத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம், முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. `இந்தச் சம்பவங்களின்போது கலவரத்தைத் தடுக்கும் முறையான பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை’ என அப்போதைய குஜராத் முதல்வர் மோடி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. இதற்கிடையே, இது தொடர்பாக மோடிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தள்ளுபடி செய்தது.
குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து அரசு ஊடகமான பிபிசி 2 பகுதிகளாக ஆவணப்படங்களை தயாரித்துள்ளது. கடந்த 17ம் தேதி ஆவண படம் ஒன்றை வெளியிட்டது. இதில் பிரதமர் மோடி பற்றி எதிர்மறையான கருத்துகள் இருப்பதோடு, கலவரத்துடன் பிரதமர் மோடியை தொடர்புபடுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. ‛‛இந்தியா- மோடிக்கான கேள்விகள்’ என்ற தலைப்பில் வெளியான இந்த ஆவணப் படம் பல்வேறு வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் இந்தியாவில் பிபிசி ஆவணப்படத்தின் யூடியூப், டுவிட்டர், இணைப்புகளை ஒன்றிய அரசு முடக்கியது.