
கலிபோர்னியா: வாட்ஸ்அப்பில் பயனர்கள் குரல் பதிவுகளை ஸ்டேட்டஸாக வைக்கலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. வெகு விரைவில் இந்த அம்சம் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது குறித்து பார்ப்போம். இப்போதைக்கு இது பீட்டா பயனர்களின் பயன்பாட்டுக்கு அறிமுகமாகி இருப்பதாகவும் தகவல்.
வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள இத்தளம் வருகிறது. பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரை இப்போது குழுவாக ஒருவருக்கு ஒருவர், ஒருவருக்கு பலர் என இதன் மூலம் தகவல்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர்.
தங்களது பயனர்களுக்கு தனித்துவமான பயன்பாட்டு திருப்தியை வழங்கும் பல்வேறு புதிய அப்டேட்களையும், அம்சங்களையும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில் பயனர்கள் வாட்ஸ்அப் தளத்தில் குரல் பதிவுகளை ஸ்டேட்டஸாக வைக்கும் அம்சம் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனை WaBetaInfo உறுதி செய்துள்ளது. 2.22.21.5 ஆண்ட்ராய்டு பீட்டா அப்டேட்டில் இது கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்கள் இந்த புதிய அம்சத்தை ஸ்டேட்டஸ் பிரிவின் டெக்ஸ்ட் பகுதியில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குரல் பதிவு ஸ்டேட்டஸ்களை யார், யார? பார்க்கலாம் மற்றும் பயனர்கள் நிர்வகிக்க முடியும் என தெரிகிறது. அதோடு இந்த வீடியோ ஸ்டேட்டஸ் போலவே 30 நொடிகள் வரை வைக்க முடியும் என இப்போதைக்கு தெரிகிறது.
பதிவு செய்த குரல் ஸ்டேட்டஸ்களை எடிட் செய்ய முடியுமா அல்லது பிலே செய்து பார்க்க முடியுமா என்பது போன்ற விவரங்கள் இந்த அம்சம் பொது பயன்பாட்டுக்கு வந்த பின்னரே தெரியவரும்.
Android 2.23.2.8க்கான WhatsApp பீட்டா: புதியது என்ன?
வாட்ஸ்அப் சில அதிர்ஷ்ட பீட்டா சோதனையாளர்களுக்கு நிலை புதுப்பிப்புகள் வழியாக குரல் குறிப்புகளைப் பகிரும் திறனை வெளியிடுகிறது!https://t.co/ZHmQu368oz pic.twitter.com/ETsDLogxbC