
விக்கிப்பீடியாவில் தனது தாய் குறித்து தவறான தகவல் உள்ளதாக நடிகர் வடிவேலு உருக்கமாக தெரிவித்துள்ளார்.
டாப் காமெடி நடிகர்
தமிழ் திரையுலகின் டாப் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. 100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராக பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் வடிவேலு. தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு வழங்கியதால் கடந்த 10 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் வடிவேலுவுக்கு வழங்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. இதையடுத்து படங்களில் மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார் நடிகர் வடிவேலு.
Ajith, AK 62: ஐஸ்வர்யா ராய் கூட அது வேண்டாம்… கண்டிஷன் போட்ட அஜித்… கதையை மாற்றும் விக்கி!
தாயார் மறைவு

இந்நிலையில் நேற்று இரவு நடிகர் வடிவேலுவின் தாயாரான சரோஜினி அம்மாள் திடீர் என மரணமடைந்தார். 87 வயதான சரோஜினி அம்மாள் மதுரை வீரகனூர் அருகே வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சரோஜினி அம்மாள், மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று இரவு சரோஜினி அம்மாள் சிகிச்சைப் பலனின்றி காலமானார்.
Ramya Pandiyan: நாள் முழுக்க பார்த்துக்கிட்டே இருக்கலாம்.. சேலையில் கிறங்க வைக்கும் ரம்யா பாண்டியன்!
எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை

சரோஜினி அம்மாளின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் வடிவேலு தனது தாயார் மரணம் குறித்து பேசியுள்ளார். அதில் “எனது தாய் சரோஜினி நேற்று நள்ளிரவு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மறைந்துள்ளார். அவர் யாருக்கும் சிரமம் ஏற்படக் கூடாது என்று பொங்கல் பண்டிகையை நல்லபடியாக ஆடு மாடு எனக் கொண்டாடிவிட்டு தற்போது மறைந்துள்ளார்.
கடைசி வரை யாருக்கும் அவர் எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை. தானாக நடந்தார், தான் வளர்க்கும் ஆடு மாடுகளையெல்லாம் பிடித்து பொங்கலை கொண்டாடினார். திடீரென மரணமடைந்து விட்டார்.
Vadivelu Mother Passes away: வடிவேலுவின் தாயார் திடீர் மரணம்… திரையுலகினர் இரங்கல்!
அம்மா பற்றி தவறான தகவல்

முதல்வர் ஸ்டாலின் என்னை போனில் தொடர்பு கொண்டு அம்மாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். என்னை தைரியமாக இருக்கும்படி ஆறுதல் கூறினார். அமைச்சர் அன்பில் மகேஷ், பூச்சி முருகன் ஆகியோரும் போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினர். விக்கிப்பீடியாவில் என் அம்மா பற்றி தவறான தகவல் உள்ளது. என் அம்மாவின் பெயர் பாப்பா என்கிற சரோஜினி. சிறு வயதில் அவரை பாப்பா என்று அழைப்பார்கள். ஆனால் அவர் பெயர் சரோஜினிதான். விக்கிப்பீடியாவில் வைத்தீஸ்வரி என்று தவறாக உள்ளது. எனவே அதனை அழித்து விடுங்கள். இவ்வாறு மிகுந்த சோகத்துடன் கூறியுள்ளார் நடிகர் வடிவேலு.
வாரிசு, வம்ஷி: ஜேம்ஸ் கேமரூன், ஸ்பீல்பெர்க் கூட தியாகம், ஹார்ட் ஒர்க்ன்னு புல்லரிக்கல… வம்சியை வச்சு செய்யும் ப்ளூ சட்டை!
இன்று மாலை இறுதிச்சடங்கு

நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி அம்மாளின் இறுதிச்சடங்குகள் வீரகனூரில் இன்று மாலை நடைபெறுகிறது. நடிகர் வடிவேலு பொங்கல் பண்டிகையை கொண்டாட தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார். பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் அம்மாவுக்கு உடல் குறைவு ஏற்பட்டதால் அவரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்த வடிவேலு அவரை கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் சரோஜினி அம்மாளின் உயிர் பிரிந்தது வடிவேலுவையும் அவரது குடும்பத்தினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தாயை இழந்து வாடும் வடிவேலுவுக்கு ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
Vanitha vs Thirumavalavan: ஒரு எம்பி செய்யுற காரியமா இது? திருமாவளவனை விளாசிய வனிதா!
வடிவேலு
