
உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அட்டகத்தி தினேஷ் நடிப்பில் வெளியாகி விமர்சனரீதியாக வரவேற்பைப் பெற்ற ‘விசாரணை’ படம் போலவே இந்தப் படத்தையும் புதிய பாணியில் உருவாக்குகிறார் வெற்றிமாறன். ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்தப் படம் தயாராகி வருகிறது. எல்ரெட் குமார் தயாரிக்கும் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
இந்நிலையில் நீண்ட காலமாக தயாரிப்பில் இருந்த ‘விடுதலை’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இரண்டு பாகங்களாக உருவாகி வந்த இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்ததாக தயாரிப்பு தரப்பு தெரிவித்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது.
Pathaan Collection: ‘கே.ஜி.எஃப் 2’ சாதனையை தூக்கி சாப்பிட்ட ‘பதான்’: மாஸ் காட்டும் ஷாருக்கான்.!
இந்நிலையில் தற்போது ‘விடுதலை’ படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் துவங்கியுள்ளது. விஜய் சேதுபதி டப்பிங் பேசும் புகைப்படங்களும், உடன் இயக்குனர் வெற்றிமாறன் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. டப்பிங் பணிகள் நிறைவடைந்ததும் படத்தின் ரிலீசுக்கான வேலைகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Maaveeran: ‘மாவீரன்’ படம் குறித்து தீயாய் பரவும் தகவல்: படக்குழு அதிரடி அறிவிப்பு.!
இந்தப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. ‘விடுதலை’ படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் சூர்யா நடிக்கவுள்ள ‘வாடிவாசல்’ படத்தின் வேலையை வெற்றிமாறன் துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.