
உதடு கிழிந்து பற்கள் உடைந்து…
தற்போது காக்கி, பிச்சைக்காரன் 2, கொலை, ரத்தம், மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மலேசியாவில் ‘பிச்சைக்காரன் 2’ படப்பிடிப்பில் பங்கேற்றிருந்தார் விஜய் ஆண்டனி. அப்போது லங்கா தீவில் கடலுக்குள் இயக்கப்படும் ஸ்கை ஜெட் வாகனத்தை இயக்கிய போது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்த விஜய் ஆண்டனி. நடிகை காவ்யா தாப்பர் எந்த காயமும் இன்றி தப்பினார். இதில் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. விஜய் ஆண்டனியின் உதடு கிழிந்து பற்கள் உடைந்தது. இந்த சம்பவம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Ajith, AK 62: ஐஸ்வர்யா ராய் கூட அது வேண்டாம்… கண்டிஷன் போட்ட அஜித்… கதையை மாற்றும் விக்கி!
சென்னை திரும்புகிறார்

லங்காவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜய் ஆண்டனியை அவரது குடும்பத்தினர் இன்று இரவு சென்னைக்கு அழைத்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விஜய் ஆண்டனிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. விஜய் ஆண்டனி படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்த தகவல் அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Vadivelu Mother Passes away: வடிவேலுவின் தாயார் திடீர் மரணம்… திரையுலகினர் இரங்கல்!