
1/18/2023 2:45:32 PM
சென்னை: நடிகர் விஜயின் வாரிசு படம் வெளியான 7 நாட்களில் 210 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் உருவான வாரிசு படமும், நடிகர் அஜித் நடித்த துணிவு படமும் பொங்கல் பண்டிகையை ஒட்டி கடந்த 11ம் தேதி வெளியானது. 2 படங்களுமே முதல் நாளில் இருந்தே கலெக்சனை வாரி குவித்து வருகிறது. குறிப்பாக கடந்த 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் இந்த இரண்டு படங்களுமே வசூல் வாரி குவிந்துள்ளன.
வாரிசு படம் கடந்த 7 நாட்களில் 210 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகின்றனர். மறுபுறம் அஜித்தின் துணிவு படமும் 175 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.