
பிட்ச் ரிப்போர்ட்:
ராய்பூர் பிட்ச் பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும். பௌலிங் பிட்சில் புட்கள் இருப்பதால், முதலில் பந்துவீசும் அணியால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இதனால், டாஸ் மிகமுக்கியமாக இருக்கும், ஸ்பின்னர்களால் ஓரளவுக்குத்தான் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் எனக் கணிக்கப்பட்டது. இறுதியில் இதேபோல்தான் நடந்தது.
நியூசிலாந்து இன்னிங்ஸ்:
முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் டாப் ஆர்டர் பேட்டர்கள் பிட்சை சரியாக கணிக்காமல் விளையாடினார்கள். பந்துகள் சிறப்பான முறையில் ஸ்விங் ஆனது. எக்ஸ்ட்ரா பவுன்ஸும் இருந்தது. இருப்பினும், இதனை பொருட்படுத்தாமல், நியூசிலாந்து பேட்டர்கள் தொடர்ந்து அதிரடியாக விளையாட முற்பட்டனர்.
அடுத்தடுத்து விக்கெட்:
இதனால், நியூசிலாந்து அணியின் ஓபனர்கள் பின் ஆலன் 0 (5), டிவோன் கான்வே 7 (16), ஒன் டவுன் பேட்டர் ஹென்ட்ரி நிகோலஸ் 2 (20), அடுத்து டெரில் மிட்செல் 1 (3), டாம் லதாம் 1 (17) ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களை மட்டும் அடித்து, நடையைக் கட்டினார்கள்.
108 ரன்கள்:
அடுத்து, பந்து பழையதாக மாறியதால் ஸ்விங் கிடைக்கவில்லை. எக்ஸ்டா பவுன்ஸும் செய்ய முடியவில்லை. இதனால், அடுத்துக் களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் 36 (52), பிரேஸ்வெல் 22 (30), மிட்செல் சாண்ட்னர் 27 (39) ஆகியோர் ஓரளவுக்கு ரன்களைச் சேர்த்தனர். தொடர்ந்து டெயில் எண்டர்ஸ் சிறப்பாக செயல்படவில்லை. இதனால், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 34.3 ஓவர்களில் 108/10 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இந்திய அணியில் முகமது ஷமி 3/18 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். ஹார்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர் இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.