
உணவு பிராண்டுகள்
ஏற்கனவே இந்தியாவில் பிரபலமான பல பிராண்டுகளான KFC, மெக்டொனால்டஸ், டாமினோஸ், பர்கர் கிங், ஸ்டார்பக்ஸ், கோஸ்டா காஃபி போன்ற பல பிராண்டுகள் வந்துள்ள நிலையில், தற்போது உலக நாடுகளில் சில இடங்களில் மட்டுமே பிரபலமாகவும் அதே நேரம் தனக்கெனத் தனிப் பிராண்டு வேல்யூ கொண்ட பிராண்டுகள் துவங்கியுள்ளன.

போபியேஸ்
இந்த வரிசையில் அமெரிக்காவில் பிரபலமான சிக்கன் பிராண்டான Popeyes இந்தியாவில் பெங்களூரைத் தொடர்ந்து வேறு எந்த நகரங்களுக்கும் செல்லாமல் சென்னைக்குத் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து முதல் கடையைத் திறந்து அசத்தியுள்ளது.

அமெரிக்க ஃப்ரைடு சிக்கன்
இந்தியாவில் பல முன்னணி உணவு பிராண்டுகளைக் கொண்டு வந்த ஜூபிலண்ட் ஃபுட் ஒர்க்ஸ் லிமிடெட், அமெரிக்கன் ஃப்ரைடு சிக்கன் பிராண்டான் போப்யாஸ் சென்னையில் முதல் உணவகத்தைத் திறந்துள்ளார் என்று நிறுவனத்தின் உயர் அதிகாரி புதன்கிழமை தெரிவித்தார்.

பெங்களூர்
Popeyes நிறுவனம் இந்தியாவில் முதன் முதலில் ஐடி நகரமான பெங்களூரில் தனது முதல் உணவகத்தை 2022 ஜனவரி மாதம் திறந்ததைத் தொடர்ந்து அடுத்த ஒரு வருடத்திற்குள் பெங்களூர் நகரம் முழுவதும் 12 உணவகங்களை விரைவாக விரிவாக்கம் செய்யப்பட்டது.

மும்பை, டெல்லி
இதைத் தொடர்ந்து மும்பை, டெல்லி போன்ற நகரங்களைத் தேர்வு செய்யாமல் சென்னையில், ஃபீனிக்ஸ் மார்க்கெட்சிட்டி மாலில் வரும் ஜனவரி 20 முதல் தனது முதல் உணவகத்தில் வாடிக்கையாளர்களை வரவேற்கிறது என்று ஜூபிலண்ட் ஃபுட் ஓர்க்ஸ் லிமிடெட் மும்பை பங்குச்சந்தையில் தாக்கல் செய்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லூசியானா டெஸ்ட்
உலகெங்கிலும் உள்ள மக்கள் Popeyes இன் Louisiana பாணி Cajun சுவைகளை விரும்புகின்றனர். ஒரு நிறுவனமாக, நாங்கள் எங்கள் பிராண்டுகளின் சிறந்த சுவையை மக்களுக்கு அளிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துகிறோம்.

சமீர் கெதர்பால்
பெங்களூரை தொடர்ந்து சென்னைக்கு வந்துள்ள நிலையில் அடுத்தடுத்து நாட்டின் பிற நகரங்களுக்கு விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளோம். மசாலா மற்றும் கஜூன் சுவையூட்டப்பட்ட பிராய்டு சிக்கன் தான் எங்களின் முக்கிய உணவு, இது சென்னை மக்களுக்கு பிடிக்கும் என நம்புகிறோம் என Popeyes நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் சமீர் கெதர்பால் கூறினார்.

ஜூபிலண்ட் ஃபுட் ஓர்க்ஸ்
இந்தியாவில் Popeyes-ஐ அறிமுகம் செய்துள்ள ஜூபிலண்ட் ஃபுட் ஓர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு Popeyes அனுபவத்தை நேரடியாக வழங்க நூற்றுக்கு நூறு சதவீத எலக்ட்ரிக் டெலிவரிகளைப் பயன்படுத்தி நேரடியாகச் செய்ய முடிவு செய்யப்பட்டது.