
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 19 ஜனவரி, 2023 07:18 PM
வெளியிடப்பட்டது: 19 ஜனவரி 2023 07:18 PM
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 19 ஜனவரி 2023 07:18 PM

சென்னை: இன்றைய இணைய உலகில் பெரும்பாலான மக்கள் தங்களுக்கு வேண்டிய தகவல்களை இலவசமாக அறிந்துகொள்ள உதவுகிறது கட்டற்ற தகவல் களஞ்சியமான விக்கிப்பீடியோ. இந்தத் தளம் கடந்த 10 ஆண்டுகளில் முதல்முறையாக டெஸ்க்டாப் அப்டேட்டை பெற்றுள்ளது. புதுப்பொலிவு பெற்றுள்ள இந்தத் தளத்தின் புதிய அப்டேட்கள் குறித்து பார்ப்போம்.
சுமார் 58 மில்லியனுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், 300 மொழிகளில் தகவல்கள் மற்றும் மாதந்தோறும் சுமார் 16 பில்லியன் வியூஸ் என விக்கிப்பீடியாவின் இயக்கம் உள்ளது. இந்த நிலையில் எளிதான பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் சில அம்சங்கள் இப்போது இந்தத் தளம் டெஸ்க்டாப் பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நம்மில் பலருக்கும் விக்கிப்பீடியா கட்டுரைகள் பல்வேறு தருணங்களில் உதவி இருக்கலாம். கல்லூரியில் அசைன்மென்ட் செய்வதில் துவங்கி பல்வேறு விஷயங்களை அறிந்து கொள்வது வரை அது நீள்கிறது.
புதிய அம்சங்கள் என்னென்ன?
- எளிதாக கட்டுரையை நேவிகேட் செய்யலாம்: ஒரு கட்டுரையில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கு சுலபமாக நேவிகேட் செய்யும் வகையில் ‘டேபிள் ஆப் கன்டென்ட்’ மாற்றப்பட்டுள்ளது.
- பல்வேறு மொழிகளுக்கு எளிதில் ஸ்விட்ச் செய்து வாசிக்கலாம்: பல்வேறு மொழிகளில் ஒரே கட்டுரையைப் படிக்கும் வாசகர்களுக்கு உதவும் வகையில் லேங்குவேஜ் ஸ்விட்ச்சிங் டூல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
- இதோடு பயனர்கள் ஸ்க்ரால் செய்வதை குறைக்கும் நோக்கில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
- அதே நேரத்தில் முந்தைய செயல்பாடுகள் எதையும் விக்கிப்பீடியா நீக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தவறவிடாதீர்!