
வெளி கிரகங்களை பற்றி தெரிந்து கொள்ளும் அதே நேரத்தில் பூமியின் ரகசிய செயல்பாடுகளை ஒரு புவியியல் ஆய்வு குழுவினர் எப்போதும் ஆராய்ந்து வருகின்றனர். பூமியின் சுழற்சி, அதன் உள்ளே இருக்கும் பொருட்கள், அவைகள் அனைத்தும் பல ஆண்டுகளாக கவனித்து வருகின்றன. அப்படி கவனிக்கும் போது பூமியின் உட்கரு சுழற்சி நின்றது தெரிய வந்துள்ளது.
பூமியின் அடுக்குகளை 3 முக்கிய பிரிவுகளாக பிரிப்பர். தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள் வாழும் மேற்பரப்பை கிரஸ்ட் – மேலோடு என்று பிரித்தனர். அதற்கு கீழ் வெப்பம் நிறைந்து பாறைகள் உருகி நெருப்பு பிழம்பாக ஓடும் மாண்டில் பகுதி உள்ளது. நில அதிர்வு, எரிமலை வெடிப்பு ஏற்படும் போது நெருப்பு குளம்புகள் இங்கு இருந்துதான் வெளிவருகிறது.
அதற்கு கீழ் கோர் என்ற மத்திய கரு உள்ளது. இதன் வெளிப்புறம் திரவ நிலையில் உள்ளது. அதன் உள்ளே, அதிக அழுத்தம் மற்றும் பூமியின் நடுவில் குவிந்துள்ள இரும்பின் அடர்த்தி காரணமாக இறுகிய இரும்பு பந்து போல பூமியின் உட்கரு அமைந்துள்ளது. நாம் வாழும் மேற்பரப்பிலிருந்து தோராயமாக 5,000 கிலோமீட்டர்கள் (3,100 மைல்கள்) கீழே உள்ள இந்த “கிரகத்திற்குள் உள்ள கிரகம்” பூமி சுழலும்போது திரவ நெருப்பு குழம்பில் மிதந்து கொண்டே சுழலும்.
தற்போது ஆய்வில் “கிட்டத்தட்ட 2009 ஆம் ஆண்டு இந்த சுழற்சி நிறுத்தப்பட்டு பின்னர் எதிர் திசையில் திரும்பியுள்ளது” என்று ஆய்வின் ஆசிரியர்கள், சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகத்தின் சியாடோங் சாங் மற்றும் யி யாங் ஆகியோர் கண்டறிந்துள்ளனர். இந்த உள் கருவானது எவ்வாறு சுழல்கிறது என்பது விஞ்ஞானிகளிடையே விவாதத்திற்குரிய விஷயமாக உள்ளது. மேலும் இந்த சமீபத்திய ஆராய்ச்சி சர்ச்சைக்குரியதாக இருக்கும் என்றும் பல ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பூமியின் மேற்பரப்புடன் ஒப்பிடும்போது உள் மையமானது முன்னும் பின்னும் ஒரு ஊஞ்சலைப் போல சுழல்கிறது . இந்த ஒரு சுழற்சி சுமார் ஏழு தசாப்தங்கள் நடைபெறும். அப்படி தான் இப்போது திசை மாறியுள்ளது என்று ஒரு ஆராய்ச்சி குழு தெரிவிக்கிறது. பூகம்பங்கள் அல்லது சில சமயங்களில் அணு வெடிப்புகளால் உருவாக்கப்பட்ட நில அதிர்வு அலைகள் பூமியின் நடுவில் படரும் போது அது மாற்றங்களுக்கு வித்திடலாம். அப்படி கடந்த 60 ஆண்டுகளில் ஏற்பட்ட நில அதிர்வுகளால் உட்கரு சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்புகின்றனர்.
இந்த மாற்றத்தால் ஒரு வருடத்தில் ஒரு மில்லி வினாடியின் ஒரு பகுதி குறைந்து தினசரி நாளின் நீளம் சிறிதளவு குறையும்.. மேலும் இது பூமியின் காந்த வளையங்களையும் சிறிதளவு பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), உண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சி, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV: