
நஞ்சுக்கொடி என்பது தாய்க்கும், கர்ப்பப்பையில் வளரும் குழந்தைக்கும் இடையேயான இணைப்புக் கொடி ஆகும். கர்ப்பகாலத்தில் கருப்பையின் உட்சுவரில் இருந்து உருவாகும் இந்த உறுப்பு, குழந்தையின் தொப்புளுடன் இணைந்திருக்கும். இது, கருவுக்கு மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. அதுமட்டும் அல்ல, கருவின் ரத்தத்திலுள்ள கழிவுகளை அகற்றும் பணியையும் செய்கிறது.