
சத்யடெல் நாலா
உலகின் பெஸ்ட் சிஐஓ-வாக அங்கிகாரம் பெற்றுள்ள சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் 2வது ரவுண்டு பணிநீக்க அறிவிப்பில் சுமார் 11000 ஊழியர்களை இன்ஜினியரிங் மற்றும் மனிதவள பிரிவில் இருந்து பணிநீக்கம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லின்கிடுஇன் தளம்
இந்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து லின்கிடுஇன் தளம் முழுவதும் கண்ணீருடன் வெளியேறும் மைக்ரோசாப்ட் ஊழியர்களின் பதவிகள் நிறைந்துள்ளது.

மைக்ரோசாப்ட் பணிநீக்கம்
மைக்ரோசாப்ட் தற்போது பணிநீக்கம் செய்யப்பட்ட பெரும்பாலானவர்கள், அதிக அனுபவம் உள்ளவர்கள், அதிகச் சம்பளம் வாங்கும் பதவியில் இருப்பவர்கள் தான். இந்தக் கண்ணீர் கதை ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் மெல்போர்ன்-ஐ சேர்ந்த ஒரு டெமோகிராபர் முக்கியமான புள்ளிவிவரத்தை வெளியிட்டு உள்ளார்.

அதிகப் பணியாளர்கள்
மெல்போர்னை சேர்ந்த புள்ளியியல் ஆய்வாளர் என அறியப்படும் சைமன் குயெஸ்டன்மேச்சர் பகிர்ந்துள்ள புள்ளிவிவரங்களின்படி, ஜூன் 2021 முதல் 2022 வரை மைக்ரோசாப்ட் தனது பணியாளர்களின் எண்ணிக்கை 1,81,000 இலிருந்து 2,21,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

40,000 ஊழியர்கள்
அதாவது 1.5 வருடத்தில் 40,000 ஊழியர்களைக் கண்மூடித்தனமாக அதிகரித்துள்ளது. ஆனால் அடுத்த வருடமே யாரும் எதிர்பார்க்காத வகையில் தனது முந்தைய நடவடிக்கைக்குச் சற்றும் பொருத்தம் இல்லாமல் 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோகேம் இல்லை,
மைக்ரோசாப்ட் விளையாடுவதற்கு இது வீடியோகேம் இல்லை, நிஜ மக்களின் நிஜமான வாழ்க்கை இதில் அடக்கம். மேலும் Simon Kuestenmacher தனது டிவிட்டர் பதிவில் மைக்ரோசாப்ட் ஓவ்வொரு வருடமும் எத்தனை ஊழியர்களைப் பணியில் சேர்த்துள்ளார், இதன் மூலம் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை எவ்வளவு உயர்ந்துள்ளது என்ற தகவலை வெளியிட்டுள்ளார்.

வரலாற்றுச் சாதனை
இதில் மைக்ரோசாப்ட் வரலாற்றில் அதிகமான ஊழியர்களைப் பணியில் சேர்த்தது 2022, கூடுதல் ஊழியர்களைப் பணிநீக்கம் 2023. ஆனால் தற்போது இதில் மாட்டிக்கொண்டு விழிப்பது ஐடி மற்றும் டெக் ஊழியர்கள் தான், அமேசானும் இதே தவறைச் செய்தது ஆனால் அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டது. ஆனால் மைக்ரோசாப்ட் இதுக்குறித்து வாயை திறக்கவில்லை.

2 வருடம்
மேலும் மைக்ரோசார்ட் சிஐஓ சத்ய நாடெல்லா அடுத்த 2 வருடத்திற்குக் குலோபல் டெக் துறைக்கு மிகவும் கடினமான காலகட்டமாகத் தான் இருக்கும் எனக் கணித்துள்ளார், இதனால் 2023 ஆம் ஆண்டு மறுசீரமைப்பு பாதிப்பு மிகவும் மோசமாக இருந்தால் கட்டாயம் அடுத்த ரவுண்ட் பணிநீக்கம் வர வாய்ப்பு உள்ளது.