
சம்பளத்தினை குறைக்கலாம்
பணி நீக்கம் குறித்து தனது கருத்தினை கூறிய அஷ்னீர் குரோவர், தனது லிங்க் இன் பக்கத்தில், ஒவ்வொரு நாளும் பணி நீக்கம் குறித்து கேட்பது வருத்தமளிக்கிறது. மோசமான சந்தைகளின் காரணமாக நான் ஒரு போதும் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டியதில்லை. ஏனெனில் நான் எப்போதும் கவனத்துடன் பணியமர்த்தினேன். ஒரு நிறுவனராக நீங்கள் நீண்டகால பிரச்சனை குறித்து யோசிக்க வேண்டும்.

சம்பள குறைப்பு செய்யலாம்
அதனையும் தாண்டி பணி நீக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தால் நீங்கள், 25% – 40% சம்பள குறைப்பை செய்யலாம். நிறுவனங்கள் ஏன் இதனை தேர்வு செய்வதில்லை. எனக்கு இது புரியவில்லை. பணி நீக்கத்திற்கு மாற்றாக 25 – 40% வரையிலான சம்பளக் குறைப்பு குறித்து சில காலத்திற்கு முன்பே பதிவிட்டிருந்தேன். நிறுவனங்கள் ஏன் அந்த பாதையில் செல்ல மறுக்கிறார்கள் என எனக்கு புரியவில்லை. எனர்ஜி, கேப்பிட்டல், டெக்னாலஜி என அனைத்துமே மறுவிலையில் கிடைக்கும்.

எனது குழுவை திரும்ப பெற்றுள்ளேன்
அவர் தனது வரவிருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் அதிகபட்சம் 50 பேரை பணியமர்த்தியுள்ளார். தனது அணியில் சேருபவர்கள் வளர்ச்சியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறினார். மேலும் எனது குழுவை நான் திரும்ப பெற்றுள்ளேன் என தனது லிங்க் இன் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

டெக் துறையில் வீழ்ச்சி
அஷ்னீர் குரோவர் மைக்ரோசாப்ட், கூகுள், மெட்டா, அமேசான், ட்விட்டர், சிஸ்கோ மற்றும் சேல்ஸ்போர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் பல ஸ்டார்ட் அப்கள் மற்றும் நிறுவனங்களும் பணி நீக்க நடவடிக்கையை தொடங்கியுள்ள நிலையில், குரோவரின் இந்த கருத்தானது வந்துள்ளது.

விசாவில் உள்ளவர்கள் பணி நீக்கம்
இந்த பணி நீக்க நடவடிக்கையில் ஹெச்1 பி விசா மற்றும் எல் 1 விசாவினால் பெரியளவில், சுமார் 30 – 40% இந்திய ஐடி ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்விக்கி, டன்சோ, இன்மோபி, கோமெக்கானிக் உள்ளிட்ட இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் தேவையானது சரிவில் காணப்படுகின்றது. இந்த ஒப்பந்தங்களும் சரிவினைக் கண்டுள்ளன. இதன் காரணமாக வேலை வாய்ப்புகளும் குறைந்துள்ளன. இதற்கிடையில் தான் பணி நீக்கமும் அதிகளவில் இருந்து வருகின்றது.

சம்பளத்தினை குறைத்து கொள்ளலாம்
பணி நீக்கத்தின் மத்தியில் புதிய வேலைகளை ஊழியர்கள் தேடும் நிலையில், அவர்களுக்கு குறைவான சம்பளமே கொடுக்கப்பட்டு வருகிறது. இது முந்தைய வேலையை விட குறைவான சம்பளமே என்ற நிலையில் இருந்து வருகிறது. ஆனால் தற்போது நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் புத்திசாலிதனமாக இருக்க வேண்டும். செலவினங்களைக் குறைத்துக் கொள்ளலாம். நிறுவனங்களும் ஊழியர்களை வெளியே அனுப்புவதை விட, சம்பளத்தை குறைத்து வைத்துக் கொள்ளலாம். முன்னதாக ஒரு நிபுணர்கள் கூறுகின்றனர்.