
சலுகைகள் அதிகரிக்கப் படணும்
சில தினங்களுக்கு முன்பு தான் இந்தியாவில் சமானிய மக்கள் தான் மறைமுக வரிகளில் அதிகம் செலுத்துவதாக தகவல்கள் வெளியானது.ஆக அப்படிப்பட்ட சாமானியர்களுக்கும், நடுத்தர மக்களுக்கும் உதவும் வகையில் பட்ஜெட்டில் சில முக்கிய எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன. குறிப்பாக மக்கள் பெரும்பாலும் பலன் பெரும் 80சி பிரிவின் கீழ் சலுகைகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

80சி பிரிவின் கீழ் விலக்கு
பொதுவாக இந்த 80 சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய்க்கு வரி விலக்கு கிடைக்கும். இந்த விகிதத்தினை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்த வரி விலக்கானது கடந்த 2014ல் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆக இந்த முறையில் இதில் மாற்றம் செய்யப்பட வேண்டும். இதன் மூலம் வரி செலுத்துவோருக்கு சலுகையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

புதிய வரி ஏதும் விதிக்க வேண்டாம்
இன்னும் ஒரு தரப்பு வரி விலக்கு அதிகரிக்கவிட்டாலும் பரவாயில்லை. புதியதாக எந்த வரியும் விதிக்காமல் இருந்தாலே போதும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர். சர்வதேச நாடுகள் சரிவினைக் கண்டு வரும் நிலையில், இந்தியாவின் வளர்ச்சி சற்றே பரவாயில்லை என்று எதிர்பார்த்தாலும், மக்களுக்கு இன்னும் வரிச் சலுகைகளைக் கொடுத்து ஊக்குவிக்க வேண்டும். இது மக்கள் கைகளில் பணப்புழக்கத்தினை அதிகரிக்க தூண்டுகிறது. இது தேவையை அதிகரிக்க உதவுகிறது.

ரூ.2.5 லட்சம் ஆக அதிகரிக்கணும்
குறிப்பாக வரவிருக்கும் பட்ஜெட் ஆனது நடப்பு மத்திய அரசின் கடைசி முழு பட்ஜெட் ஆகும். ஏனெனில் 2024ல் மக்கள் தேர்தல் வரவுள்ள நிலையில், இதில் மக்களுக்கு சாதகமாக, குறிப்பாக சம்பத்தானவர்களுக்கு சாதகமான அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் முக்கிய எதிர்பார்ப்பு, 80 சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய் சலுகை கிடைக்கும், 2.5 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்ற மற்றொரு தரப்பு கோரிக்கையும் எழுந்துள்ளது.

சம்பளதாரர்களுக்கு ஆறுதல் கிடைக்குமா?
இதற்கிடையில் சம்பளதாரர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலை தரவிருக்கும் அறிவிப்பை இந்த பட்ஜெட்டில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது வருமான வரி உச்ச வரம்பில் அதிகரிப்பு இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. இது உண்மையில் நடுத்தர மக்கள் சம்பளதாரர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமையும் எனலாம்.

எவ்வளவு இருக்கலாம்?
தற்போது வரியில்லா வரம்பானது 2.5 லட்சம் ரூபாயாக இருக்கும் நிலையில், இது 3 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இது மோடி தலைமையிலான அரசின் கடைசி முழு பட்ஜெட் என்பதால் பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.